சின்னஞ் சிறு பெண்
7
விடுகிறது. பளார்! தோள்பட்டை வரை அவள் கைகள் தொட்டிக்குள்ளேயே போய் விடுகின்றன. அடாடா! ஆகா! என்ன அருமையான காட்சி!”
இருவரும் இருமல் எழுகிற வரை சிரித்தார்கள். பிறகு தங்கள் கண்களில் மல்கிய கண்ணீரை அவர்கள் துடைத்துக் கொள்ள நேர்ந்தது.
"அப்புறம் அந்தப் பன்றிகள்......”
“நேரே அவற்றின் வாய்களில் அவள் முத்தமிட்டாள்!”
“பன்றிகளும் வெளியே போக வேண்டியது தான்! குடிசை பன்றிகளுக்காக ஏற்பட்ட இடம் அல்ல' என்கிறாள் அவள்.”
"ஒரு வாரம் பூராவும் அவள் ஒழுங்கு படுத்தினாள்.”
“வேர்த்து விறு விறுக்கும்படி எங்கள் இருவரையும் வேலை வாங்கினாள்.”
“சிரித்துக்கொண்டும், கூப்பாடு போட்டுக்கொண்டும். தனது சிறிய பாதங்களால் ஓங்கி மிதித்தும்-”
"அப்புறம் திடீரென்று அமைதியும் ஆசாரமுமாக மாறி விட்டாள்.”
"அவளே சாகப் போவது போல-”
“கண்ணீர் வடித்துக் கொண்டு, அவளுடைய நெஞ்சே விம்மி வெடித்து விடுகிற மாதிரிக் கதறுகிறாள். என்ன விஷயமோ தெரிய வில்லையே என்று நான் அவளைச் சுற்றிப் பரபரத்துத் தவிக்கிறேன். மிகவும் அதிசயமான விஷயம் தான். நானும் அழுகிறேன். ஏன் என்று