இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
16 இரண்டு குழந்தைகள்
அவை வெள்ளே நாடாக்கள் போல் தோன்றும்படி மாற்றி விட்டன. வானம் தெளிவாய் நட்சத்திரங்கள் நிறைந்து காணப்பட்டது. விசேஷ நாளே உத்தேசித்து யாரோ பித்தளே-பாலிஷ் போட்டு அவற்றைத் தேய்த்து விளக்கியது போல் நட்சத்திரங்கள் பிரகாசமாக மின்னின. ஆனுல் அப்படிச் செய்வது சாத்தியமில்லையே!
வீதிகள் அதிகமான ஆள் நடமாட்டத்துடனும் சந்தடியோடும் விளங்கின. குதிரைகள் ரஸ்தாக்களில் குதித்துக் குதித்துச் சென்றன. மனிதர்கள் நடை மேடைகளின் மேல் கடந்து போனார்கள். அவர்களில் சிலர் அவசரமாகப் போனார்கள். மற்றவர்கள் மெதுவாக நடக் தார்கள். முன்னவருக்குக் கவலைகளும் பொறுப்புகளும் இருந்தன; கதகதப்பான மேல் அங்கிகள் இல்லை; ஆகவே அவர்கள் வேகமாக கடங்தார்கள். மெது நடை நடந்தவர் களுக்கோ கவலைகள் இல்லே பொறுப்புகளும் இல்லை. அவர்கள் மேலே கதகதப்பான கோட்டுகள் கிடந்தன. மிருதுவான ரோமச் சட்டைகள் கூட அணிந்திருந்தார்கள் அவர்கள்.
இப்பேர்ப்பட்ட, கவலைகள் இல்லாத, மிருதுவான ரோமக் கோட்டு போட்டிருந்த-அதிலும் வெகு அழ கான கழுத்துப்பட்டி அணிந்திருந்த-ஒருவரின் கால்களுக் குள்ளே தான் நேராக வந்து உருண்டன. இரண்டு சிறு பந்துகள். அந்தக் கனவான் மிகவும் ஒழுங்காக நடந்து போய்க்கொண்டிருந்தார். பழங் துணிகள் கந்தல் ஆகிய வற்றினுல் உருட்டி எடுத்த அந்த இரண்டு பந்துகளும் அவர் கூடவே ஓடின. அதே சமயம் இரண்டு சிறு குரல் களும் எழுந்தன. - "அன்புள்ள ஐயா...' என்று சிறு பெண் குரல் ஒன்று இழுத்தது.