உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சின்னஞ் சிறு பெண் (மொழிபெயர்ப்பு).pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இரண்டு குழந்தைகள் 25 கொஞ்ச காலமாகவே நான் ஒரு ஜதை மீது கண் வைத்திருக்கிறேன். நீ சும்மா இரு. நான் அவற்றை அடித்துக் கொண்டு வந்து விடுவேன். ஆனால் இப்போ நாம் செய்ய வேண்டியது-எல்லோரும் சாப்பிடுகிற பொது விடுதிக்குப் போவோம். என்ன, போகலாமா?” "நம்ம அத்தை மறுபடியும் கண்டுபிடித்து விடுவாள். போன தடவை செய்தது போலவே இப்பொழுதும் நமக்குச் சரியானபடி பூசைக்காப்பு கொடுப்பாள்" என்று காட்கா பயங்து கொண்டே சொன்னாள். ஆயினும், விடுதிக்குச் சென்று அங்குள்ள உஷ்ணத்தில் சுகம் பெறலாம் எனும் ஆசையின் தூண்டுதலுக்கு அவள் இணங்கி விடுவாள் என்ற உண்மையை அவளுடைய குரலே எடுத்துக் காட்டியது. "நமக்குக் கொடுப்பாளா? அவள் செய்ய மாட்டாள். நாம்-நீயும் நானும்தான்-தகுந்த விடுதி ஒன்றைத் தேடிப் பிடிப்போம். நாம் யார் என்கிற விஷயம் அங்கே இருக்கிறவர்களில் ஒருவருக்குக் கூடத் தெரியாது.” "அப்படிச் செய்யலாமா?" என்று காட்கா நம்பிக்கையோடு பேசினாள். "ஆகவே நாம் செய்யப்போவது இதுதான்-முதன் முதலாக, மசாலையிட்ட இறைச்சி அரை ராத்தல் வாங்குவோம். அதற்கு எட்டு கோப்பெக்குகள்.வெள்ளை ரொட்டி ஒரு ராத்தல்-அஞ்சு கோப்பெக்குகள்.ஆக, பதின்மூன்று. அப்புறம், ஒன்று மூன்று கோப்பெக்குகள் வீதம் இரண்டு இனிப்பு பன் வாங்குவோம். அதற்கு ஆறு கோப்பெக்கு. மொத்தம், பத்தொன்பது ஆயிற்று. அதன் பிறகு ஒரு பானைத் தேநீர்-ஆறு கோப்பெக்கு. இப்போ, கால் ரூபிள் காலி. அதை எண்ணிப் பாரு. அதன் பிறகு நம்மிடம் மீதம் இருக்கக்கூடியது-"