பக்கம்:சிறந்த வாழ்வுக்குச் சில யோசனைகள்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

30

சிறந்த வாழ்வுக்குச் சில சிந்தனைகள்


சினம்

சூறாவளி மரங்களைச் சாய்த்து விடுகிறது. இயற்கை படைத்த எழிலை அழித்து விடுகிறது. நில நடுக்கம் நகரங்களையே அழித்து விடுகிறது. அதே போன்ற சினங் கொண்டவன் தன்னைச் சுற்றிப் பல தீங்குகளை உருவாக்கிக் கொள்கிறான்.

அல்லலையும், அழிவையும் அவனே ஆக்கிக் கொள்கிறான்.

உன்னிடம் உள்ள குற்றம் குறைகளை நினைவில் கொண்டால், பிறர் செய்யும் தவறுகளை நீ பொருட்படுத்தாது மன்னிக்க விரும்புவாய்.

எப்போதும் சீற்றம் கொள்ளாதே. அது உன் வாளையே கூர்மையாக்கிக் கொண்டு உன்னையே குத்திக்கொள்வதற்குச் சமமாகும். அது உன் உற்ற நண்பனையே கொலை புரியும் கொடிய செயலாகும். உனக்குச் சினத்தை உண்டாக்கக் கட்டிய செயலில் பிறர் ஈடுபடும்போது நீ சம நிலையைக் கைவிடாது, பொறுமையுடன் சிந்திக்க முற்பட்டால் நல்ல தெளிவு ஏற்பட்டு அவற்றை எல்லாம் மறந்துவிடக் கூடும்.

ஆத்திரப்படுபவனுக்கு அறிவு மட்டு என்பதை மறக்காதே. பிறர் சினமடைவதைக் கண்டு நீ பெறவேண்டிய ப ா ட த் ைத க் கற்றுக்கொள். சினத்தை உன்னால் கட்டுப்படுத்திக் கொள்ள முடியவில்லை என்றால் அதை மறந்துவிடு.