சுதந்திரப் பறவைகள் ) 47 வாங்கவே முடியாதோன்னு தோணிச்சு. ஒருத்தன் சொன்னான். இந்த ரயில்லே இப்படிக் கஷ்டப்படுவதைவிட, ஆம்னி பஸ் அழகா இருக்கு; ரிேஸ்ட் பஸ்னு ஜோர் ஜோரோ ஒடுது; வசதியா டிராவல் பண்ணலாம்; ரயிலை விட வேகமாப் போகும்; ரயிலுக்கு முந்தி ஊருக்குப் போயிடலாம்னான். அவனும் நம்ம பக்கத்துக்காரன்தான் நானும் அவன் கூடவே சேர்ந்து வரலாம்னு துணிஞ்சு கிளம்பினேன். வாறதே நிச்சயம் இல்லாமல் இருந்ததுனாலும், அவசரம் அவசரமாகக் கிளம்பியதனாலும், எதுவுமே வாங்கி வரமுடியலே. அவன் பேச்சு எல்லோருக்கும் ஏமாற்றம் அளித்தது. பெரியவர்கள் அதை வெளியே காட்டவில்லை. -ரயில்லே வரலியா? பஸ்லோ அவ்வளவு துரரம் வந்தே? எப்படியும் வசதிக் குறைவாத்தான் இருக்கும். இப்படி ஒவ்வொருவர் ஒன்றை சொல்லி வைத்தார்கள், -ரயிலில் வந்திருந்தால், கொடை ரோடிலே ஆரஞ்சு, திராட்சை மலிவா வாங்கியிருக்கலாம்.........திண்டுக்கல்விலே, மலைப்பழம் செளகரியமாக் கிடைக்கும்........ மனப்பாறை முறுக்கு பேர்போனது என்பாக...சாத்துரிலே வெள்ளரிப் பிஞ்சு ருசியாயிருக்கும். வண்டிக்குள்ளேயே கொண்டாந்து, விற்பாங்க... இந்த விதமாகவும் பேசினார்கள். என்னத்தைப் பேசி என்னத்துக்கு? இவன்தான் வீசின. கையும் வெறும் கையுமாக வந்து நிற்கிறானே என்று ஒரு அக்காளின் மனம் அலுத்துக் கொண்டது. 'எவ்வளவு ஆசையாயிருந்தேன்! புது டிசைன் நெக்லேஸ் வரும்னு!’ என்று வசந்தா தனக்குள் அழுதுகொண்டாள். மருமகள்களும் மருமகன்களும் குழந்தைகள் இயல்பின் படி நடந்துகொண்டார்கள்.
பக்கம்:சுதந்திரப் பறவைகள்.pdf/49
Appearance