உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுழலில் மிதக்கும் தீபங்கள்-தமிழ்நாடு அரசுப் பரிசு.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

40

சுழலில் மிதக்கும் தீபங்கள்


சோதனையே பண்ணியிருக்கிறேன். அங்க ரொம்பக் குழந்தைகள் பின்தங்கிய வகுப்பு. நல்ல ‘ரிஸ்ல்ட்’ கொண்டு வந்திருக்கிறேன். ஒரு குழந்தை பாருங்க, தாய், ஒரு திருடி, தகப்பன் ஒரு குடிகாரன். அவளுக்குப் பெற்றோராலேயே ‘ப்ராப்ளம்.’ அம்மாவே பெண்ணைத் திருடச் சொல்லுவா. கெளரவமா இருக்க இந்தப் பள்ளிக்கூட யூனிஃபார்ம்! போலீசில புடிச்சிட்டுப்போய் இந்தப் பள்ளிக் கூடத்துப் பெண்ணுன்னு சொன்னதும், ஸ்கூலுக்கே கேவலம்னு அவளுக்கு டி. ஸி கொடுக்க ஹெட்மாஸ்டர் பிடிவாதமா இருந்தார். அவளை நான் தனியாக வச்சிக்கிட்டு, பிரச்னையை அவ அம்மாவையே கூப்பிட்டுப் பேசினேன். இரண்டு வருஷம் அவுளுக்குச் சொல்லிக்குடுத்தேன். டென்த் பாஸ் பண்ணிட்டுப் போனா.”

“வொன்டர்ஃபுல் ஆன்டி! நீங்க, இப்ப வெறும் அடுப்புப் பூச்சியாயிட்டீங்களே!” தூண்டிக் கொடுத்ததும் பொலபொல வென்று ஆற்றாமை சரிகிறது.

“இப்ப. நானா. நானான்னு ஆயிட்டது. என் குழந்தைகளுக்குக் கூடச் சொல்லிக் கொடுக்க முடியாத நிலை. கவிதா, இங்கிலீஷ்ல நாற்பது மார்க் வாங்கியிருக்கு. கோச்சிங் கிளாசுக்குப் போறா நினைச்சால் கஷ்டம்தான்...”

“இது அப்பட்டமான உரிமைப் பறிப்புன்னு தோணலியா உங்களுக்கு?”

“தோணினால் என்ன செய்யலாம்? இட் இஸ் டு லேட்...”

“பெட்டர் லேட் தேன் நெவர்...” என்று ரத்னா அவள்கையைப் பற்றுகிறாள்.

“இப்ப என்ன பண்ணலாம்? இந்த வீட்டுப் பொறுப்பை யார் ஏற்பார்கள்?”

“உங்களைப் போல் இருக்கிறவர்கள், சொந்தக் குழந்தைகளுக்கும் அந்நியமாகும் நிலைமையில் இருப்பது பரிதாபம் தான். உங்க வீட்டில் மாட்டியிருக்கும் படம் பற்றித் தெரிய