உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:செவ்வானம்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 17 திறந்து யாரென்று கவனிக்கலாமா? எவனாவது முரடனாக இருந்தால்? ஒருவருக்கு அதிகமான நபர்களாகயிருப்பின்? ஒருவனாகவே இருந்தாலும், கையில் கத்தி அல்லது அரிவாள் அல்லது தடி அல்லது. தாமோதரனின் மனப்புரி கட்டவிழ்ந்து சுழன்று சுழன்று மேலே எவ்வியது. பல திக்குகளிலும் தடவியது. அது ஆள் என்று ஏன் நினைக்க வேண்டும்? மாடு அல்லது கன்றுக்குட்டியாக... சே இராது. ஆளேதான். ஆளாகத்தானிருக்க முடியும் இருக்கட்டுமே அது எனக்கு ஆபத்து விளைவிக்க வந்த ஆள் என்று நான் ஏன் எண்ண வேண்டும்? வேறு யாராவது. இந்த விதமாக மனம் அலைக்கழித்ததினால் அவனது அமைதியின்மை அதிகரித்தது. அவன் திடுமென்று ஒரு முடிவுக்கு வந்தான். அவசரமாக எழுந்தான். வருவது வரட்டும் என்று துணிந்து கதவைத் திறந்தான். டடக் - ஒலிஎழுப்பித்தாள் விலகிக் கதவுதிற்ந்த வேளையிலே தடதடவென்று காலடி ஓசை கனந்தது, அதிகரித்துத் துரிதகதியில் ஒலித்தது. ஆனால் கதவை நோக்கி வராமல் எதிர் திசையில் விலகியது. யாரோ ஒடுவதை உணர்ந்தான் அவன் 'யாரது? யார் அங்கே?' என்று கத்தினான். பதில் கிட்டவில்லை. ஒட்டம் அதிகரிப்பதுபோல் ஆயினும் ஒடிப் பழக்க மில்லாததனால், இடம் தெரியாததனால், தடம் தவறிப்போனதால் திண்டாடுவது போல் தோன்றியது. தாமோதரனுக்குத் துணிவு ஏற்பட்டது. தீங்குதன்னைத்தேடிவரவில்லை என்ற உண்மை உதயம் அவனுக்குத்தனிஉணர்வும் வேகமும் அளித்தது. அங்குவந்தது யார் தன் வீட்டருகே தயங்கி நின்றது ஏன் பின் ஒடிப் போனது எதனால்? - அனைத்தையும் அறிய வேண்டும் என்ற துடிப்பு உந்த அவன் ஓடினான். துரத்தும் வேட்டை நாயானான். செ. -2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:செவ்வானம்.pdf/19&oldid=841379" இலிருந்து மீள்விக்கப்பட்டது