ராஜம் கிருஷ்ணன் 23 அரைமணி காத்திருப்பதாகவே இல்லை. பொற்சிறகு களுடன் பறந்து போகிறது. அறையில் கிள்ளிவளவன் மட்டுமே அமர்ந்திருக்கிறான். அதே கறுப்புத்துண்டுத் தோழமை. "வணக்கமுங்க, நம்ம பொண்ணுதா.” உட்கார்ந்தவாறே புன்னகை செய்கிறான். உட்காருங்க' என்று ஆசனம் காட்டுகிறான். "எப்படி சவுக்கியமெல்லாம்? அப்பா நல்லாயிருக்காரா?” "இருக்காருங்க நல்லபடியா..." "இது ஒரே மகதானா?” "இன்னொண்ணு இருக்கு. அது படிக்கல ரொம்ப குடும்பமா வச்சிட்டேன். விவசாயக் குடும்பத்தில வீட்டுக்கும் ஆளு வேண்டிருக்குங்களே!” "இவ மதிப்பெண் மற்ற தகுதி எல்லாம் திருப்தியாகவே இருக்கு உங்க மகளுக்கு நல்ல எதிர்காலம் காத்திருக்கிறது. வாழ்த்துகள்' என்று காந்தியைப் பார்த்துப் புன்னகை செய்கிறான். அவள் தலையைக் குனிந்து கொள்கிறாள். “ரொம்ப நன்றிங்க...” என்று சம்முகம் உணர்ச்சி வசப்பட்டுப் போகிறார். "இந்த நிறுவனமே பின் தங்கிய இனத்தினருக்காக தொழிற்கல்வி என்று தொடங்கப்பட்டிருக்கிறது." "சொன்னாங்க...” "இது ஒரு புதிய சகாப்தத்தை நோக்கிச் செல்லும் நுழைவாயில், எலக்ட்ரானிக்ஸ், சிவில் இன்ஜினியரிங், பிசினஸ் மானேஜ்மென்ட் என்ற பலதுறைகளும் தொடங்குகிறார்கள். இன்னும் விரிவுபடுத்தப் பல திட்டங்களிருக்கின்றன." வளவன் மேசையிலிருக்கும் கண்ணாடிக்குண்டைக் கையில் வைத்துக்கொண்டு திட்டங்களை விவரிக்கிறான். அதெல்லாம் புரியாது போனாலும் மகிழ்ச்சியுடன் ஆமோதிக் கிறார் சம்முகம். "அதனாலே, சம்முகம், உங்க மகள் ஒர் அதிர்ஷ்டப் பாதையில் கால் வைக்க அனுமதி கிடைச்சாச்சு. நீங்க ஒர் இரண்டாயிரம் முதலில் கட்டிடணும்." திக்கென்று கண்ணாடிக் குண்டைத் தம்மீது எறிந்து விட்டாற்போல் அவர் அதிர்ச்சியுறுகிறார். "உங்க மகன்னில்ல. செலக்ஷன் ஆகும் மாணவியர் யாராக
பக்கம்:சேற்றில் மனிதர்கள்.pdf/25
Appearance