உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சேற்றில் மனிதர்கள்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 சேற்றில் மனிதர்கள் தந்தையின் மெளனம் அவளுக்குச் சங்கடமாக இருக்கிறது போலும்? "ஏம்பா, நீங்க உங்க சங்கத்துக்கு கட்சிக்கின்னு எத்தினியோ உழக்கிறீங்க. எத்தினியோ பேர் உங்களுக்குத் தெரிஞ்சவங்க நல்லநிலையில் இருப்பாங்க. பதவியில் இருக்கிறவங்க கூடதான். யாரனாலும் இந்த ஒத்தாசை செய்யமாட்டாங்களா? கேட்டுப் பாருங்கப்பா...” "எங்கம்மா? எஸ்.எம். இருக்காரு? டெல்லில போயிப் பார்க்க முடியுமா?” "இயக்கத்தில் சம்பந்தப்பட்டவங்க எத்தினியோ பேர்தா அன்னிக்குத் தெரிஞ்சவங்க ஆனா, எவ்வளவோ நல்லாத் தெரிஞ்ச வளவனே, இதுல சம்பந்தப்பட்டவரே, கட்டாயமா குடுக்கனும்னு சொல்லிட்ட பிறகு யார நம்பிம்மா போறது?." "இந்த வருசமும் வீணாப் போகக் கூடாதுப்பா..." "பார்ப்பம். வடிார்ட் ஹான்ட் டைப்ரைட்டிங் படிக்கலாம், வேலைவாய்ப்புப் பத்தி ரேடியோவில கூடச் சொன்னாங்க, நாலு நாமுன்ன. எதுக்கும் இப்ப புதுக்குடில விசுவநாதனப் போயிப் பார்ப்பம். அவருடைய அண்ணன் மகதான பெரிய டாக்டருக்குப் படிச்சி ஆஸ்பத்திரி வச்சிருக்காங்க. உனக்கு ஏதானும் நர்ஸ் வேலை, இல்லாட்டி அம்மை குத்துர சுகாதார இனிஸ்பெட்டரு வேலை முயற்சி செய்யச்சொல்ற.." "போங்கப்பா, எனக்கு சீக்கு அழுகைன்னாலே புடிக்கல." புதுக்குடி பஸ் கிளம்பத் தயாராக இருக்கிறது. மணி இரண்டரையாகிவிட்டது. அந்தக் காலத்தில் இந்த விசுவநாதன், பெரிய வீட்டுப் பிள்ளையாக அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் எம்.ஏ. படித்துக்கொண்டிருந்தவர். இளம் புரட்சியாளராக இவர் களிடையே கனல் மூட்ட வந்தார். ஒவ்வொரு அமாவாசை இரவிலும் அவர்களைத் தேடிக் கூட்டம் நடத்த வருவார். கூட்டம் முடிந்ததும் அவரைப் பத்திரமான இடத்தில் கூட்டிக்கொண்டு விடுவது அந்நாள் பதினான்கு வயதுப் பையனாக இருந்த சம்முகத்தின் பொறுப்பு. கிராமம் கிராமமாகச் செல்வதும், தலைமறைவுத் தலைவர்களுக்கு உணவு கொண்டு செல்வதும், இரகசியக் கூட்டங்களுக்குச் செய்தி கொண்டு செல்வதும் அந்த நாட்களில் இவருடைய முக்கியப் பணிகள். உயர் வகுப்பில்