உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சேற்றில் மனிதர்கள்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 சேற்றில் மனிதர்கள் "ஆரு அட.. அட? கிளியந்துற சம்முகமா? குரலில் உற்காசம் பீறிடுகிறது. "உக்காரு, உக்காரப்பா.” பெஞ்சியில் உட்காருகிறார். "உட்காரம்மா. நம்ப மக காந்திமதி.” "தெரியுமே? இங்க படிச்சிட்டிருந்தாளே? இப்ப என்ன கோர்ஸ் படிக்கிறா?" "எஸ்.எஸ்.எல்.சி.யோட நிறுத்திட்டமே? அதுக்குதா இன்னிக்கு வந்தது. உடம்பு ரொம்ப மெலிஞ்சி போயிட்டீங்க ளேய்யா?” ஒற்றைப் பல் தெரியச் சிரிப்பு. 'அறுபதுக்கப்புறம் உடம்பு மெலியனும் கூடவே ஏழெட்டு ஆயிருக்குமே!” "ஆமா! உன் மூத்த பையன் என்ன பண்ணறான்? முன்ன ஒருகா அவன் வேலை சம்பந்தமா வந்த நான்கூட இங்க சுப்புசாமி வந்தான், சொன்னேன்...!" இவர் முகம் சுருங்குகிறது. “வேலையாயிருக்கிறான், மட்றாசில, கைத்தறி போர்டில..?" "பணம் ஒழுங்கா அனுப்புறானா?” "ஏதுங்க? கலியாணம் கட்டிக்கிட்டானே?" "அப்பிடியா? அதென்ன, கட்டிக்கிட்டானேங்கற? நீங்க பார்த்துப் பண்ணலியா?" o "கண்காட்சி வேலை செய்ய ஒரு பிராமணப் பொண்ணு வுந்து பழகிருக்கு. கட்டிக்கிட்டேன்னு கம்முனு எழுதிட்டான். எனக்கு அந்தப் பய பேரில எப்பவோ நம்பிக்கைவிட்டுப் போச்சு. ஆனா, அம்மாகாரிக்குத்தா மனசில ரொம்ப வருத்தம். ஒரு கவுரதியா படிச்ச பையனுக்குக் கலியாணம் காட்சி செய்யமுடியாமப் போச்சேன்னு:" "அப்படியா சமாசாரம்.? பிராமணப் பொண்ணுகதா பெரும்பாலும் அரிசனக் கட்டுகிறதெல்லாம். சிரித்துக் கொள்கிறார். 7. 'ராமசாமி எப்பிடி இருக்கிறான்? உங்கப்பாவுக்கு எழுபத்தஞ்சு வயசுக்கு மேல இருக்குமேடா?” "ஆமாங்க, கண்ணு சுத்தமாத் தெரியல..." "கள்ளுக்கடதா தொறந்தாச்சி. பொஞ்சாதிய இப்பவும் அடிக்கிறானா?”