ராஜம் கிருஷ்ணன் 35 சாமர்த்தியத்தில் மூணு பங்குகூட இருக்கும். இவம் பேரு தெரியுமா? நினைப்பு இருக்கா?” "ஏன் இல்ல, இவந்தா புல்கானின்." "அடுத்த பையன் ஜவஹர், பிறகு காமராஜு, கடசிப் பையனுக்கு என்ன பேரு தெரியுமா சம்முகம்?" அவர் சிரிக்கிறார். இவருக்கு சிரிப்பு வரவில்லை. "வுடுங்கையா அந்தப் பேச்சை. நன்றி கொன்ற ஆளுங்களப் பத்தி என்ன பேச்சு? நாயவுடக் கேவலம். இது மாதிரி ஆளுங்களாலதா இந்த நாடே கெட்டுப்போச்சு. தலைன்னு ஒண்னு ஒழுங்கால்லாம.” "தலை நிறைய ஆயிட்டது. அதான் ஆபத்து. இந்த பிரும்மா, நாலு முகத்தை திக்குக்கொண்ணா வச்சிட்டு படச்சிப் போடுறாரு அதான் ஒருத்தன் போற வழி ஒருத்தன் போறதில்ல." "உங்களப் பாக்கணும்னு நினைச்சேன். பார்த்தாச்சி, நா வரேன் ஐயா...' - "இரு, போகலாம், நா ஒண்னு சொல்ற, உனக்கு இரண்டாயிரம் இந்தப் பயகிட்ட ஒரு வார்த்த வுட்டாப் போதும். பேசாம வாங்கி, பெண்ணைச் சேரு. இப்ப இவனுகளுக்கு ஒரு பொருட்டில்ல அது.” சம்முகத்துக்குக் கோபம் கொள்ளவில்லை. "என்னையா! நீங்க ஒண்ணு, வெளயாடுறீங்க.. காந்தி வாம்மா, போவலாம்!” "என்னடா, கோபிச்சிட்டுப் போற? இப்படி எல்லாம் பாத்திட்டு உக்காந்திருக்கிறேன். பிடுங்கல் மென்மையான உணர்ச்சிகள்,தன்மானம், இல்லே நேராகப் பார்க்கும் வீரம் எதுவுமே இப்ப செல்லுபடியாகப் போறதில்ல. அதென்ன, கால்ல, நானும் அப்பவே புடிச்சிப் பார்க்கிறேன். வீங்கிருக்கிதா என்ன?” m "தெரியலய்யா, ஒரே வலி, வரணுமேங்ற ஒரு நிர்ப்பந்தம், வந்தேன்...' அருகில் அழைத்துக் குதிகாலைத் தொட்டுப் பார்க்கிறார். o ".கீதா ஆறு மணிக்கு மேலதா வருவா. இரேன் போகலாம்?" “டாக்டர் இங்க இல்லையாய்யா? என்னால இருக்கிறதுக் கில்ல. நடவு வேற.” "அவுங்க தஞ்சாவூர்லல்ல இருக்காங்க, இங்க வந்து
பக்கம்:சேற்றில் மனிதர்கள்.pdf/37
Appearance