உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சேற்றில் மனிதர்கள்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 சேற்றில் மனிதர்கள் குங்க..." "அதான் முன்னமே சொன்னது, நீங்க இப்படித் தவண கேட்பீங்கன்னு. உன் பண்ணக்காரன் குப்பன்தான் அடாவடிக் காரன். அதும், அவன் பய வடிவு இருக்கிறானே, என்ன எகிறு எகிறறாங்கற? அம்மன் கோயில் பக்கம் பரம்பரையா புத்து இருக்கும். அதுபாட்டில நல்லதுங்க குடியிருக்கும். எப்பவானும் கண்ணுல படும். எங்க வீட்ல கூட பொண்டுவ பால் வய்க்கிறது வழக்கம். இப்ப ஒண்னு இல்ல. இந்தப்பய அல்லாத்தையும் கொன்னு தோலக் கொண்டு வித்துப்போட்டான்." "அப்படிங்களா?” f "ஆமாம். இப்ப ஆள வரச்சொல்லி சுத்து வட்டம் சுத்தம் பண்ணி முன்னால மண்டபம் எடுத்து, புனருத்தாரனம் பண்ணப்போறம்.” "குடிசைகளை அப்புறப்படுத்தச்சொல்லு நல்லபடியாவே, என்ன குடிசை? ஒலைக்குடிசைங்க? ஆளுக்கு அம்பது ருவா வேணாலும் தந்திடறம், வீனா ரசாபாசம் வச்சுக்காதிங்க?" விருத்தாசலம் பிள்ளை மேல் வேட்டியை வேகமாகச் சரியாக்கிக்கொண்டு போகிறார். மண்டையில் அடித்த மாதிரி இருக்கிறது. வாசலில் அப்பாவைக் காணவில்லை. ஏதேனும் பொட்டு பொடிசு கையைப் பிடித்துக் கொண்டு கள்ளுக்கடைக்குப் போயிருப்பார். திண்ணையில் நாகு உட்கார்ந்து ஏதோ புத்தகத்தைக் கிழித்துக் கொண்டிருக்கிறான். ஆத்திரம் பற்றிக்கொண்டு வருகிறது. பளாரென்று முதுகில் அறைந்துவிட்டு அதைப் பிடுங்கிப் பார்க்கிறார். விவசாயத் தொழிலாளர் சங்கச் செயலாளருக்கு சென்னையிலிருந்து அனுப்பப்பெற்றிருக்கும் துண்டுப்பிரசுரம். 'இந்தப் பய கையில் எட்டும்படி ஒரெளவையும் வைக்காதீங்கன்னு சொன்னா கேட்டாத்தான? பன்னிப்பயல்! நாய்ப்பயல்! போடா! இவன ரூம்பில போட்டுப் பூட்டாம் ஏ வுட்டு வக்கிறிய?” எல்லா ஆத்திரமும் அவன் மீது வடிகிறது. அவனைக் காந்தி கத்தக்கத்த இழுத்துச் சொல்கிறாள். காந்தியிடம்