40 சேற்றில் மனிதர்கள் "இவன் யாரு இங்க நாட்டாமை பண்ண வந்தது? எல்லா இவளாலதா, பயல அன்னைக்கே, அடிச்சி வெரட்டுன்னேன்! துரை, இங்க வந்து அதிகாரம் பண்றானா? செருப்பாலடிக்க." “காந்தி, கொஞ்சம் சுடுதண்ணி வச்சிக் கொண்டா! காலுல ஊத்திட்டுச் செத்தப் படுக்கிறேன்.” காந்திக்கு முசுமுசென்று கோபம் வருகிறது. உள்ளே சன்னக்குரலில் நாகு ஊளையிடுகிறான். பானையில் தண்ணிர் இல்லை. குடியிருப்புக்கு ஒர் அடி பம்பு உண்டு. அதை இந்தக் குட்டிப்படைகள் அடித்து அடித்து ஒடித்துவிட்டன. அதற்கு விமோசனம் இப்போது வராது. ஆறு குளங்களில் தண்ணிர் வற்றியபிறகு அவள் தந்தைதான் செப்பனிட ஆள் கூட்டி வருவார். எரிச்சலாக வருகிறது. ஆற்றிலிருந்து தண்ணிர் முகர்ந்துவந்து முட்சுள்ளியை ஒடித்து எறியவிட்டு வெந்நீர் காய்ச்சி வருகிறாள். லட்சுமி ஆற்றில் குளித்து ஈரச் சேலையுடன் வீட்டுக்கு வருகையில் இருள் நன்றாகப் பரவியிருக்கிறது. "வந்தாச்சா? ஏண்டி? விளக்கேத்தி வைக்கிறதில்ல? ஐயா ஏன் படுத்திருக்காரு?...” காந்தி இருளோடு இருளாக அசையாமலிருக்கிறாள். "என்னாங்க...? போன காரியம் நல்லபடியாச்சா?” "ஒண்ணும் ஆவல. அந்தத் தொர எங்க?" "அவன் எங்க போனான்னு எனக்கென்ன தெரியும்? இந்த வடிவுப்பய அவன இன்னிக்கு அடிக்கப் போயிட்டான்.” "வடிவு சும்மா அடிக்கப்போனானா?” "ஆமா, இவன் வாய் குடுத்தா அவனும் வாயாடுறா, கூலி குடுக்கப் போறவ நா. நடவப் பாத்துக்கன்னு சொல்லிட்டு நா இங்கல்லா ஒட்டடி பண்ணிட்டுப் போறதுக்கு முன்ன மசுருபுடி சண்டை. இவந்தா வம்புக்குப் போகாம இருக்கக் கூடாதா?. அவனும்தா ரொம்ப எகிறறா மரியாதியில்லாம போயிட்டுது. என்னியே நீங்க சும்மாருங்கன்னு அடக்கிட்டான். நேத்துப் பறிச்ச நாத்த மட்டும் அந்தத் தெக்கோரப் பங்குல நட்டுட்டுக் கரையேறிட்டாளுவ...' "கூலி என்ன குடுத்த?” "ஏழு விகிதந்தா. அஞ்சாளுக்கு பத்துப் பேரு வந்தாளுவ..."
பக்கம்:சேற்றில் மனிதர்கள்.pdf/42
Appearance