46 சேற்றில் மனிதர்கள் "எல, பொய் சொன்னா பல்லு பேந்து போகும். கடவாசல்ல நின்னிட்டு இந்தக் கம்னாட்டிப்பய மவ திட்டக் குடியான ஒத அடின்னு பேசுனானா இல்லியான்னு கேளு. கிழட்டுப் பய..." சம்முகத்துக்குச் சுரீலென்று உறைக்கிறது. அந்தத் தோப்புக்காரனும் அருணாசலமும் ஒரு பக்கம். உடம்பிலே ஒரிடத்தில் கேடு வந்தால் எல்லா இயக்கமும் கோளாறாவது போல் தான். புறக் காவல் நிலையம் என்ற அவுட் போஸ்ட் அக்கிரகாரத்துக் கோடி வீட்டில் புதிதாக ஏற்பட்டிருக்கிறது. சம்முகம் சட்டையைப் போட்டுக்கொண்டு நடக்கமுடியாமல் நடந்து செல்கிறார். 5 லட்சுமிக்கு உடல் களைப்பு அதிகமானாலும் உறக்கம் வருவதில்லை. இன்று உழைப்பின் களைப்போடு மன வலி யும் கவலையும் சுமையாக அழுத்துகின்றன. உறக்கம் கொள்ளவில்லை. கிழவர் வாயிலில் கறட்டுக் கறட்டென்ற ஒலி எழும்ப மூச்சு விட்டுக்கொண்டு திண்ணையில் துரங்குகிறார். மாமியார்க்காரி, குந்தி இருந்தபடியே தூங்குவாள். காலை நீட்டிப்படுப்பதே அபூர்வம். அம்சு. கபடம் எதுவும் பற்றியிராத உழைப்பாளிப் பெண். பசி தாங்க மாட்டாள். ஒரு தட்டுக்கு இரண்டு தட்டுச் சோறு உள்ளே செல்லுமுன் உறக்கம் வந்துவிடும். இந்தக் காந்திமதி. பையனைப் போல் இவளும் குடும்பத்தை விட்டுப் போய் விடுவாளோ என்ற அச்சம் மேலி டுகிறது. இவளை எப்படியேனும் இந்தத் தை பிறந்ததும் கட்டிக்கொடுத்து விடவேண்டும் என்ற தீவிரத்தில் தான் சீட்டு, நாட்டுப் போட்டு ஏழெட்டு எவர்சில்வர் உருப்படி வாங்கி வைத்திருக்கிறாள். நாயக்கர் வீட்டில் இருக்கின்றன. தலைவர் வீட்டில் முதல் கல்யாணம் என்று மகனின் திருமணம் நடக்கவில்லை. எத்தனை திருமணங்களுக்கோ சென்று தலைமைப் பதவியின் கெளரவம் பெற்றுக்கொண்டு மொய் எழுதிவிட்டு வந்திருக்கிறார்கள். திருமணம் என்றால் ஐந்துக்குக் குறையாமல் செலவாகும். மேல் சாதிக்காரரெல்லாம் வருவார்கள்.
பக்கம்:சேற்றில் மனிதர்கள்.pdf/48
Appearance