உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சேற்றில் மனிதர்கள்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜம் கிருஷ்ணன் 47 நல்லபடியாக விருந்து வைக்கவேண்டும். மாப்பிள்ளைக்குக் கடியாரம், மோதிரம், சட்டைத்துணி எடுக்கவேண்டும். குப்பன் சாம்பார் மகள் கல்யாணத்துக்கு பிரியாணி விருந்து வைத்து, இருபது ஏனம் எடுத்துக் காட்சிவைத்தான். அதைவிடக் குறைவாக இவர்கள் செய்யலாமா? o இத்தனை ஆண்டில் உழைப்பின் பயனாக எதுவும் சேரவில்லை என்றும் சொல்ல முடியாது. என்றாலும், இன்னமும் எதிர்பார்ப்பிலும், தடங்கல்களிலும்.அச்சுறுத்தல்களிலும் தான் போராடிக் கொண்டிருக்கிறார்கள். தலைவர் என்ற கெளரவத் துண்டைக் கழற்றாமல் பண வசூல் செய்பவராக மட்டுமே எத்தனையோ பேர் இருக்கிறார்களாம். ஆனால் இன்னமும் புருசன் வயலில் இறங்குபவன்தான். போன வாரம் உழவோட்டும் போதுதான் காலில் முள் குத்தியிருக்கிறது. அவளும் சேற்றில் இறங்குபவள் தான். உச்ச வரம்புக்கு மேல் என்று ஐயர் நிலம் ஐந்து ஏகரா சாகுபடிச் செய்யக் கொடுத்திருக்கிறார்கள். இரண்டு வருசங்களே ஆகின்றன. அதுவரையிலும் வெளியே நடவு,களை பறித்தல் எல்லாவற்றுக்கும் அவளும் மாமியாரும் போய்க் கொண்டிருந்திருக்கிறார்கள். கிழவரும் கூட உழைக்காமல் சோறு தின்றவரில்லை. அண்டைக் கட்டுவதும், வெட்டுவதும், சுமப்பதும் விட்டுச் சில நாட்களே ஆகின்றன. பையன் படிக்கிறான், பெண் படிக்கிறாள் என்று அந்தக் குடிக்கே எவ்வளவு பெருமையாக இருந்தது? காந்தி எட்டாவது வரையிலும் ரங்கநாதபுரம் பள்ளிக்குச் சென்று படித்தாள். இப்போது கிளியந்துறையிலேயே பள்ளிக்கூடம் வந்திருக்கிறது, அப்போது இல்லை. பிறகு மூன்றாண்டுகள் புதுக்குடி மிஷன் பள்ளியில் விடுதியில் இருந்து படித்திருக்கிறாள், இங்கிலீசில் கடிதாசி வந்தால் படித்துச் சொல்லும் அளவுக்குச் சூட்டிகையான பெண் என்று மிகப் பெருமையாகத்தானிருக்கிறது: ஆனால் சடங்கு சுற்றி எட்டு வருசமாகிறது. விடலைப் பிள்ளைகள், கண்ட கண்ட பாட்டுக்கள், சினிமாக்கள் இதெல்லாம் சுற்றிப் பார்க்கும்போது, அச்சம் நெருப்புப் பொறியாய் உறுத்துகிறது. வாசலில் நாய் குரைக்கிறது. அடிச் சத்தங்கள் கேட்கின்றன. லட்சுமி விளக்கைப் பெரிதாக்கிக் கொண்டு வாசலுக்கு