சேற்றில் மனிதர்கள் வரட் புயர... DT لاa-u uعا تكG - - - 1 சொட் சொட்டென்று முற்றத்தில் சான நீர் விழும் ஒசைதான் சம்முகத்தைத் துயிலெழுப்புகிறது. திக்கென்ற உணர்வுடன் கண் விழித்ததும் தன்னையுமறியாமல் கை குதிகால் புறத்தைத் தடவுகிறது. இரவெல்லாம் விண் விண்னென்ற குத்துவலி. விடிந்தால் நடக்கமுடியுமா என்ற கவலையிலேயே து க்கம் பிடிக்கவில்லை. இப்போது அவ்வளவாக வலி தெரியவில்லை போலிருக்கிறது. "எந்திரிச்சிட்டீங்களா? ராவெல்லாம் துரங்கவேயில்ல, இன்னிக்கு எப்படி ஐயா உன்னைக் கூட்டிட்டுப் போவாரு நீ வானா அண்ணனைக் கூட்டிட்டுப் போன்னு இப்பதா காந்திகிட்டச் சொன்னேன்.” "அவன் வீட்டில இருக்கிறானா? ரா எப்ப வந்தான்?" லட்சுமியின் முகம் சுருங்குகிறது. "எங்கே போயிருப்பான்? சினிமாக்குப் போயிட்டு டைலர் கடயில படுத்திருப்பான். கூட்டனுப்பிச்சா வாரான்.” "அதெல்லாம் யாரையும் கூட்டனுப்பவானாம். சுடு தண்ணி வையி. கொஞ்சம் ஒத்தடம் போட்டுக்கிட்டு மெள்ளமா நடந்திடறேன். கடவீதில ஏழுமனிக்குத்தான பஸ்ஸ வருது?" லட்சுமி கைச் சிம்னியை எடுத்துக்கொண்டு சமைய லறைக்குள் செல்கிறாள். பொழுது இன்னும் நன்றாக வெளுக்கவில்லை.
பக்கம்:சேற்றில் மனிதர்கள்.pdf/9
Appearance