பக்கம்:ஜெயகாந்தன் முதல் சிவசங்கரி வரை.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பூவை. எஸ். ஆறுமுகம் Δ 27



1. ஜெயகாந்தனின் கங்காவுக்கு இந்தத் தமிழ்ச் சாதியிலே-தமிழ்ச் சமுதாயத்திலே, தமிழ்ச் சமுதாய இலக்கியத்திலே உரிய இடம் என்ன ? அந்தஸ்து என்ன ? பங்கு என்ன ?...

2. கங்காவின் ஜெயகாந்தனுக்கு இந்தத் தமிழ்ச் சாதியிலே-தமிழ்ச் சமுதாயத்திலே-தமிழ்ச் சமுதாய இலக்கியத்திலே வழங்கப்பட்ட - வழங்கப்படுகிற... வழங்கப்படும் மரியாதையின் பாகம் எத்தனை ? அந்தஸ்தின் எடை என்ன ? இடத்தின் அளவு எவ்வளவு ?...

இந்நிலையில் :

கங்காவைத் திரும்பிப் பார்க்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுவது இயல்புதான்.

கங்கா !...

கங்காவை நான் வெகுநாட்களாகவே அறிவேன்! அதாவது, அன்பர் ஜெயகாந்தனை அறிந்து, வெகு நாட்கள் கழித்துத்தான் என்னால்கங்காவைச் சந்திக்கவும் அறியவும் உணரவும் முடிந்தது.

கங்கா உங்களுக்கும் புதியவள் அல்லள்.

கங்கா!

கங்கா, யார் தெரியுமோன்னோ ?...

ஆசார அனுஷ்டானம் நியம நிஷ்டை அது இது என்றெல்லாம் அந்நாளில் ரொம்பவும் உயர்வாகப் பேசப்பட்ட பிராமணக் குடும்பத்தில் அவதரித்தவள் கங்கா; கன்னி இளமான் ; தவிர, அவள் கல்லூரி மாணவியுங்கூட !-அவள் கதை பழசு; ரொம்ப ரொம்பச் சின்னது, ஆனாலும், இன்னொரு தரம் புதுசாகச் சொல்லிப் பார்க்கலாம் !