உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:டாக்டர் மு.வ. அவர்கள் தமிழ்மொழி இலக்கியத்துக்கு ஆற்றிய தொண்டு 130.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35 மேலும் மேலும் அவற்றைப் படிப்பார்கள். அப்படியே தொடர்ந்து நற்றிண்ை, அகநானூறு முத்லிய சங்க இலக்கி யங்களையும் பயிலத் தொடங்குவார்கள் என்று கூறினர். நான் அவர் உள்ளத்தையும் சங்கத் தமிழை நாட்டில், பரப்பும் நாட்டத்தையும் உணர்ந்து வியந்தேன். இதே மருதப்பனை மற்ருெரு அகநானூற்றுப் பாடலைப் படிக்க வைக்கிருர். 'ஆதிமந்தி போலப் பேதுற்று இணை வேன் கொல்லோ என்ற அடிகள் என் கண் எதிரே நின் றன என இவர்தம் மருதப்பர் பேசுகிறர்.அகநானூற்றையா வது படிக்கலாம் என்று அந்தப் புத்தகத்தை அப்படியே திறந்த அவர்முன் இந்த அடிகள் நிழலிட்டனவாம். 'ஆதி மந்திபைத்தியமானதை எண்ணினேன்' என அவரையே ஒரு முடிவுரையும் கூறவைக்கிறர் மு.வ. (செந். ப. 68). புற நானூறும் அகநானூறும் படிக்கும் வரையில் மனத்தில் ஒருவாறு அமைதி இருக்கச் செய்கின்றன (கள்ளோ 24) என்று தம் அனுபவத்தை அருளப்பன் வாயிலாகச் சொல்லுகிருர். காதல் பற்றி அருளப்பன் வாயிலாக ஒரு புது விளக் கத்தைச் சங்ககாலத் தலைவர்களாகிய பாரி, பேகன் இவர் தம் செயலோடு ஒப்புப்படுத்திக் காட்டுவது புதிய கருத் தாகும். (கள்ளோ ப. 50) 'இதுதான் உலகம். இங்கே பலருக்குக் கடமைப் பட்டு வாழ்கிருேம். பாரியும் பேகனும் கடமைகளை மறந்து சிலபொழுது வாழ்க்கையின் எல்லையைக் கண் டார்கள். அந்த முல்லைக் கொடியைக் கண்டதும் பாரி அதன் அசைவு தவிர எல்லாவற்றையும் மறந்தான். அந்த மயிலைக் கண்டதும் பேகன் அதன் நடுக்கம்ஆடல்-தவிர மற்ற எல்லாவற்றையும் மறந்தான். இது ஒருவகை அறியாமைதான். இந்த அறியாமை தான் காதல். இது ஒர் அளவிற்காவது குறித்த எல்லைக் காவது வேண்டும். அவ்வாறே அமைவது அருமை தான.