பக்கம்:டாக்டர் மு.வ. அவர்கள் தமிழ்மொழி இலக்கியத்துக்கு ஆற்றிய தொண்டு 130.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 வேருெரு இடத்தில் குறுந்தொகைப் பாடலொன்றி னைப் பொருள்வகையில் விளக்குகிறர் இவர். அக்குறுந் தொகைப் பாடலை வாழ்வொடு பிணைத்தே பாராட்டியுள் ளார். (செந். ப. 122-123) 'குறுந்தொகைப் பாட்டு நினைவில் இல்லை. ஒரு தலைவிதான் சொல்லுகிருள். தோழிக்குச் சொல்லு கிருள். தன் தாய்வீட்டுத் தோட்டத்துத் தேன் கலந்த பால் அவளுக்கு இனிக்கவில்லையாம். கணவனுடைய நாட்டுக் கலங்கல் நீர்தான் அவருக்கு இனிக்கிறதாம். அந்தப் பாட்டு வாழ்க்கையை எவ்வளவு நன்ருக எடுத்துக் காட்டுகிறது. எட்டு ரூபாய்ப் புடவை-எளிய வெள்ளைப் புடவை அவளுக்கு ஆனந்தமாக இருக் கிறது. அவளுடைய மகிழ்ச்சி முகத்தில் ஒளி வீசு கிறது.” என்று கூறி அப்பாடலில் பட்டுப் புடைவையினும் கன வர் வாங்கித் தந்த வெள்ளைப் புடைவையை உடுத்துவதில் கொள்ளும் மகிழ்ச்சியைக் காட்டுகிருர். அப்படியே உணவு பற்றிப் பேசும்போதும் 'குறுந்தொகைக் காலத் தில் நான் இருந்திருந்தால் மிளகு நீரில் உப்பு இல்லாமல் போனல் என்ன? சமைத்தவள் அன்பைவிட வேறு சுவை ஏன்? என்று பாடியிருப்பேன் எனப் பேச வைக்கிரு.ர். மேலும் 'குறுந்தொகைப் பாட்டை அந்தக் காலத்தில் ஆசிரியர் பாடம் சொன்னபோது வேப்பங்காயாக இருந் தது. இப்போது விண்னேர் அமிழ்தமாக இருக்கிறது’ (செந். ப. 123) என்று காட்டி, இத்தகைய பாடல்கள் உண்மையில் உணர்ந்தால்தான் இன்பம் தருவன எனச் சுட்டுகிறர். இந்தப் பகுதியைப் படித்து நான் அவர்களிடம் 'குறுந்தொகைப் பாடல் நினைவில்லை’ என்று ஏன் சொல்லு கிறீர்கள்; பாடலையே காட்டியிருக்கலாமே என்றேன். அவர்கள் அப்படிச் சொன் ல்ை சுவை போய்விடும். படிப் பவர் அது என்ன பாடல் என்று குறுந்தொகையை ஆராய் வார்கள். அப்போது இதுபோன்ற பல பாடல்கள் அவர் களுக்கு முன் நிற்கும். அவற்றையும் படித்துச் சுவைத்து