பக்கம்:டாக்டர் மு.வ. அவர்கள் தமிழ்மொழி இலக்கியத்துக்கு ஆற்றிய தொண்டு 130.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33 யின் அமுதசுரபி (மலர் ப. 278)நமக்குக் காட்டப்பெறுகின் றது.இவ்வாறு பாடல்களை எடுத்துக் காட்டுவது மட்டுமின் றித் தாயுமானவர்,இராமகிருஷ்ணர், இராமலிங்கர் போன் ருேர் தம் வாழ்க்கை நெறிகளையும் அவற்றைப் பின்பற்றி மக்கள் வாழின் வையம் வாழும் என்ற உண்மையினையும் பல நூல்களில் பல இடங்களில் பல பாத்திரங்கள் வழியே இவர் சுட்டிக் காட்டுகிருர். இவ்வாறு தாம் பயின்ற பல பெரியவர்தம் நூல்களையும் அவற்றில் வரும் அடிகளையும் பாடல்களையும் விளக்கிக் காட்டி, பல பாத்திரங்கள் வாயி லாக உலகுக்கு அறமுணர்த்தும் நெறியினை இவர்தம் நூல் கள் அனைத்திலும் காணலாம். நான் இங்கே இரண்டொரு நூல்களை மட்டும் எடுத்துக்காட்டாகக் காட்டினேன். அனைத்தையும் இவ்வாறு சுட்டுவது விரிவாவதோடு கால எல்லையினையும் கடப்பதாகும். பயில்வார் இந்நிலையை நான் காட்டிய நூல்களைவிட, விட்ட பிற நூல்களிலும் அமைந்திருப்பதைக் காணக்கூடும் எனக்கூறி மேலே: செல்கிறேன். சங்க இலக்கியங்களையும் அவற்றின் சிறப்பியல்புகளை யும் தனித் தனியாக மு. வ. அவர்கள் திறன்கண்டு திறன் காட்டி விளக்கி எழுதியுள்ளார். அவற்றுள் சிலவற்றை. நாளைக் காண இருக்கிருேம். இங்கே இவர்தம் நாவல்களில் பாத்திரங்கள் வாயிலாகவும் பிற வகையிலும் சங்க இலக் கியங்களை எடுத்தாளும் சிறப்பினைக் கண்டு செல்லலாம். ஒன்றிரண்டு முன்னரே கண்டோம். மேலும் சில இங்கே காணலாம். மருதப்பன் வாயிலாகச் செந்தார்ப் பைங்கிளி என்ற அகநானூற்றுப் பாடலை எடுத்துக்காட்டி,"என்ன அழகான ஒவியம்! ஒர் அழகான காதலியின் ஒவியம்! அல்ல-சிறந்த நுட்பமான காதல் ஒவியம். வாழ்க அக நானுாறு என்று வாழ்த்தினேன் (செந். 34) என்று அந்த மருதப்பனையே சொல்ல வைத்து, தாம் அந்த நூலிடமும் பாடலிடமும் கொண் , உள்ள உணர்வை மு. வ. புலப் படுத்துகின்ருர்,