உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:டாக்டர் மு.வ. அவர்கள் தமிழ்மொழி இலக்கியத்துக்கு ஆற்றிய தொண்டு 130.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 அவளுக்குச் சுற்றுப்புறத்தார் தரும் மதிப்புக்காக இருப்பவை" (செந். பக். 36) 'அடுப்பங்கரைப் பூச்சியாய் உலகம் தெரியாமல் அறிவும் வளராமல் மங்கிக் கிடக்க வேண்டுமே என்றேதான் கவலையாக இருந்தது. வீட்டுக்கு ஒரு சமையல் அறை இருக்கும் உலகத்தில் வேறு வழி இல்லை. (செந். 50) 'நண்பன் குமரப்பன் எட்டாவது பிள்ளையாம்; எட்டிப் பார்த்த இடம் குட்டிச்சுவராய்ப் போய்விடு மாம். அவனுக்குப் பெண் கொடுப்பவர்கள் அஞ்சு கிருர்களாம். என்ன நம்பிக்கை! என்ன அறியாமை' (செந். ப. 24) "மூடநம்பிக்கைகளை வளர்த்து மக்களை ஏமாற்று வதில் ஆங்கில வைத்தியன் தோற்றுவிடுகிறன். எவ்வ ளவோ புதுப்புதுப் பெயர்களை வைத்து நோய்களின் முகவரி எல்லாம் சொல்லி, அவற்றின் தாய்மார்களான பூச்சிகளுக்கெல்லாம் பெயர், வடிவம், தொழில், குணம் எல்லாம் கற்பித்து மருட்டிப் பார்த்தும் ஆங் கில வைத்தியன் ஏமாந்து போகிருன். பூசாரி வைத்தி யனே மூடநம்பிக்கையை ஊட்டுவதில் கெட்டிக் காரன். (செந். ப. 26) 'அடித்து வளரும் குழந்தைகள் நாளைக்கு அடங்காப் பிடாரிகளாகி விடும்.' (கள்ளோ. பக்.58) நாட்டுப்புறக் குடும்பங்களை நாடினல் கள்ளங் கரவற்ற நல்ல பெண்கள் கிடைக்கலாம். ஆனல் அவர்களுக்குக் கல்வியே இருக்காது. ... நகரங்களில் செல்வம் உள்ள குடும்பங்களில்தான் கற்ற பெண்கள் கிடைப்பார்கள். அவர்களிடத்தில் பெண்மைப் பண்பு அமைந்திருப்பதோ அருமை. நாகரிகத்தின் பெயரால் கண்மூடி வாழ்க்கையைக் கற்றிருப்பார்கள்." (கள்ளோ. ப. 36)