பக்கம்:டாக்டர் மு.வ. அவர்கள் தமிழ்மொழி இலக்கியத்துக்கு ஆற்றிய தொண்டு 130.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

39 "என் சுற்றத்தாருள் இரண்டு மனைவியும் ஒரு வைப்பும் ஒவ்வோர் ஆண்மகனுக்கும் தேவை என்ற கொள்கையே வாழ்கிறது”. (கள்ளோ. ப. 48) "காப்பி பரவாத மூலைமுடுக்கு உண்டா! புகை யிலை பல வடிவம் தாங்கிப் பலவகைகளில் உதவுகிற தல்லவா! உலகத்தில் பெண்ணும் ஒரு கள்ளாக - ஒரு புகையிலைக் குடியாகப் பயன்படுகிருள். எல்லாம் களிப்புக்குத்தான் - ஒருவகைத் துாண்டுதலான மயக் கத்துக்குத்தான்.' (கள்ளோ. ப. 92) 'இனிப் பள்ளிக்கூடங்களிலும் குடும்பங்களிலும் படிப்பதற்கும் நடப்பதற்கும் தொடர்பு இல்லாமல் செய்ய வேண்டும். நிற்க அதற்குத் தக' என வற் புறுத்தக் கூடாது. உண்மை உள்ளம் படைத்தவர் களை ஆசிரியர்களாக ஏற்படுத்தக் கூடாது. (மண் குடிசை.ப. 50. இது படித்தும் நடக்காதவர் மேல் வந்த வெறுப்பால் கூறியது.) 'மன ச் சான் று உடையவர்களுக்குத் தான் தொல்லை. அதை விற்று விட்டவர்ளுக்கு ஒரு கவலை யும் இல்லை." (மண், ப. 76) 'குடும்பத்தைத் திருத்த முயலலாம். நாட்டைத் திருத்த முயலலாம். முயற்சி நம் கடமை. ரயில் ஒட்டு கிறவன் எஞ்சினை நன்ருகக் காப்பாற்றுகிருன். சீர்ப் படுத்துகிருன். ஆனல் தொழிலை விட்டுப் போகும் போது அதைப்பற்றி ஏங்கவில்லை. அதுபோல குடும் பத்திலும் நாட்டிலும் நம் கடமையைச் செய்வோம். வாழ்வு முடியும்போது கவலை இல்லாமல் விடை பெறு வோம். (மண். 473) ‘'நீ மனைவி மக்களைத் திருத்த வேண்டாம் என்று சொல்லவில்லை. அதற்கான முயற்சி செய். தோல்வி