பக்கம்:டாக்டர் மு.வ. அவர்கள் தமிழ்மொழி இலக்கியத்துக்கு ஆற்றிய தொண்டு 130.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 கண்டபோது அவர்களை வெறுக்காதே. உலகத்தில் ஒரு பகுதி அவர்கள்." (மண். ப. 472) "இதுவும் சபமாலை உருட்டுவதுபோல் பிள்ளைத் தன்மையாக முடியக் கூடாதே." (மண். ப. 430) 'சுற்றுப்புறத்தில் உள்ளவர்கள் ப ட் டா ைட உடுத்திப் பகட்டாகத் திரிகிறர்கள். அவளும் அப்ப டியே திரிய விரும்புகிருள். நானே நூலாடை அணிந்து உடுத்து அழகாக விளங்கலாம் என்கிறேன். அதற் காக வருந்துகிருள். சுற்றுப்புறத்தில் உள்ளவர்கள் கழுத்தொடியக் கைந்நோகப் பொன் நகைகள் சுமந்து இறுமாக்கிருர்கள். தானும் அப்படியே இறு மாக்க விரும்புகிருள். நானே அழகைக் காக்க சில நகைகள் போதும் என்கிறேன். அதற்காகவே வருந்துகிருள்." (பாவை. ப. 170-171) "நம்முடைய குழந்தைகளுக்கு நன்மையான பொருளையே கடவுளுக்குப் படைக்கலாமே. மனம் தானே முக்கியம். சடங்கு எல்லாம் அப்புறந்தான். (பாவை. ப. 178) "கொடிய விலங்குகள் என்ன செய்தாலும் எனக்கு நன்மையாகவே முடியும். அவைகளுக்கு என்னைக் கொல்லும் கருவிகள் இருக்கலாம். ஆனல் (மனிதரைப்போல்) என்னைக் கெடுக்கும் எண்ணம் இல்லை." (பாவை.ப. 113) "உலகம் பெண்களுக்குக் கவலையை ஆக்கத் தெரிந்து கொண்டது. ஆனல் போக்கத் தெரிந்து கொள்ளவில்லை,” (பாவை. ப. 165) 'பத்தாவது படித்துவிட்ட பிறகு இங்கும் அங்கும் திரிந்து சரக்கு வாங்குவதும் கணக்கு எழுதுவதும் அவமானம் என்று எண்ணுகிறர்கள் இந்தக் காலத்துப் பிள்ளைகள்." (மலர். ப. 16)