பக்கம்:டாக்டர் மு.வ. அவர்கள் தமிழ்மொழி இலக்கியத்துக்கு ஆற்றிய தொண்டு 130.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

41 "புத்தருடைய சிலைக்குப் பக்கத்தில் பல்லி சொல் லியது. பெரியப்பா தம் சோபாவின் மேல் தம் சுட்டு விரலால் டக் டக் என்று தட்டினர்." (மலர். ப. 23) 'நேராகக் கைவிசிச் சென்றேன். குழந்தைகளும் பெரியோர்களும் தெய்வமும் உள்ள இடத்திற்கு வெறுங்கையோடு செல்லக்கூடாது என்ற பழமொழி நினைவுக்கு வந்து வந்து தூண்டியது. குழந்தைகளின் வயிறும் மடங்களும் கோயில்களும் கெட்டது போதும் என்று மற்ருெரு புறம் நானே ஆறுதல் தேடிக் கொண்டேன்." (மலர். ப. 33) "மிக நேர்மையாக இருப்பதால் லஞ்சம் வாங்கி களுக்குப் பெரிய இடையூரு யிருக்கிருர். அதனல் அவர்கள் ஒன்று சேர்ந்து கோள் சொல்லி வேறு இடத்துக்கு மாற்றிவிட முயற்சி செய்வதாகக் கேள்வி. பணவேட்டை ஆடும் சமுதாயம் நல்லவர்களுக்குத் தானே தொல்லை செய்கிறது." (மலர். ப. 48) 'குடும்பம் குடும்பமாக, சமுதாயம் சமுதாயமாக உலகத்தையே கெடுத்து வருவது பண ஆசைதானே.” (மலர். ப. 99) 'மனிதன் தன்னுடைய மனத்தில் உள்ள எண் ணத்தை யார் மேலாவது வைத்துச் சொல்லவேண்டும் . அதல்ை விநாயகர் கதையில் சேர்த்திருக்கிருன்.' (மலர். ப. 126) 'கற்போடு ஆணும் பெண்ணும் வாழ்வது எளிது அல்ல. பல குழந்தைகளைப் பெறும் தாய் தன் கற்பைக் காத்துக்கொள்வது கையும் காலும் உடைய வன் ஒற்றை மாட்டு வண்டி ஒட்டுவதுபோல. மலடா யிருப்பவள் கற்பொடு வாழ்வது கால் இல்லாத முடவன் ஒற்றை மாட்டு வண்டி ஒட்டுவதுபோலக் கொஞ்சம் அருமையே." (மலர். ப. 195)