உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:டாக்டர் மு.வ. அவர்கள் தமிழ்மொழி இலக்கியத்துக்கு ஆற்றிய தொண்டு 130.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 வழி காண்பதாகும். எனவே இவற்றுள் தம் வாழ்வொடு பின்னிப் பினைந்தவற்றையும் உலக நிகழ்ச்சிகளையும் கொண்டே சமுதாய வாழ்வின் சிக்கல்களையெல்லாம் காட்டுவதோடு, அவை களையப்பெறவேண்டிய இன்றி யமையா நிலையினையும் சுட்டியுள்ளார். இந்த வகையில் இவர் தொடாத பகுதி இல்லை எனலாம். நாட்டுச் சீர்திருத் தம், வீட்டுச் சீர்திருத்தம், கல்வி, அரசியல், வாழ்வியல், மொழியியல் இவைகளில் செய்யவேண்டிய சீர்திருத்தம் ஆகியவை பற்றியெல்லாம் விரிவாகக் காட்டுகிருர். பிறந்த தாய்நாட்டின் நிலையினையும் பயின்ற தாய்மொழியின் நிலை யினையும் எண்ணி எண்ணி எழுதுகிறர். தமிழர் நிலை இவர் உள்ளத்தைத் தொடுகிறது. இவை அனைத்தும் மாலையினைப் பின்னிப் பிணைக்கும் நூல்போல் அமைய, பாத்திரங்களின் இடையே இவர்தம் நாவல் இலக்கியங்கள் செல்லுகின்றன . நான் முன் காட்டியபடியே இவர்தம் நாவல்கள் அனைத் தையும் கொள்ளாது, ஒரு சிலவற்றில் உள்ள ஒரு சில கருத்துக்களை மட்டும் இங்கே சுட்டிக்காட்ட நினைக் கிறேன். (முற்றிலும் - எல்லா நூல்களிலிருந்தும் எடுத்துக் காட்டல் மிக விரிவுடையதாகி நிற்கும்.) "ஒன்று இரக்கம், மற்றென்று உண்மை. இந்த இரண்டு பண்பும் உடையவர்களைத் தாழ்ந்த குலத்தார் என்று நினைப்பது பாவம் அல்லவா." (செந். பக். 520). "எழுந்து ஒட்டலுக்குச் சென்றேன். சூளைத் தொழிற் சாலையைவிட ஒட்டல் எந்த வகையிலும் குறைந்தல்ல. சூளைத் தொழிற்சாலையில் யந்திரங்களும் மனிதர்களும் கலந்து வாழ்கிறர்கள். இங்கும் அப்படித்தான். ஆட்க ளெல்லாம் யந்திரங்களாக மாறிவிட்டிருக்கிருர்கள். யந்தி ரங்கள் வருகின்றன. "எல்லாம் சூடாயிருக்கிறது. என்ன வேண்டும்?' என்ற ஒரே மந்திரத்தை ஒதுகின்றன. பிறகு நேராகப் போகின்றன; நேராக வருகின்றன. மேசைப் பக் கத்தில் நின்றதும் கைகளை நீட்டுகின்றன. தட்டுகள் வெளியே வருகின்றன.அவற்றில் சிற்றுண்டி காண் கிருேம். ...போதும் போதும்.மூன்று நாட்களில் சலித்துவிட்டேன்."