6
டால்ஸ்டாய் கதைகள்
அதனாலென்ன? பிறகு வேலை செய்து கழித்துவிடப் போகிறாய். நான் மற்றவர்களைப்போல் இல்லை. உன்னை காக்கப்போடுவது, கணக்கைத் திருத்துவது, அபராதம் என்று பிடிப்பது இவை எல்லாம் நம்மகிட்டேக் கிடையாது. நேர்மையாகத்தான் நாம் நடந்து கொள்வோம். நீ எனக்காக உழைக்கிறாய், நான் உன்னை புறக்கணித்துவிடமாட்டேன்’ என்று வாஸிலி நிகிட்டாவிடம் சொன்னான்.
இதைச் சொல்லும் போது, தான் நிகிட்டாவின் ஆதரவாளன் என்று உண்மையாகவே நம்பிவிட்டான் வாஸிலி ஆன்ட்ரீவிச், நிகிட்டாவும், பணத்துக்காக அவனை நம்பி இருக்கின்ற மற்ற எல்லோரும், அவனே தங்களைப் பாதுகாக்கிறான், அவன் யாரையும் வஞ்சிக்கவில்லை என்று நினைத்து அவனது எண்ணத்தை உறுதிப்படுத்தும் வகையில் நடந்து கொள்ளும்படி பேச்சை உபயோகிக்கும் சாதுரியம் அவனுக்குத் தெரியும்.
‘ஆமாம், எனக்குத் தெரிகிறது. வாஸிலி ஆன்ட்ரீவிச், நான் உமக்காக உழைக்கிறேன். எனது சொந்தத் தகப்பனுக்குப் பாடு படுவதுபோல நான் சிரமம் எடுத்துக் கொள்கிறேன். இது உமக்கே தெரியும். எனக்கு எல்லாம் புரிகிறது!’ இப்படி நிகிட்டா பதில் சொல்வான்.
வாஸிலி தன்னை ஏமாற்றுகிறான் என்பது அவனுக்கு நன்றாகத் தெரியும். அதே சமயத்தில், அவனிடம் சொல்லி கணக்கைச் சரிபடுத்திக் கொள்ள முயற்சிப்பதோ, தன்னுடைய கட்சியை எடுத்துப் பேசுவதோ எவ்விதமான பயனும் தராது; தனக்கு