32
டால்ஸ்டாய் கதைகள்
Page வார்ப்புரு:Custom rule/styles.css has no content.Script error: No such module "Custom rule".
அவர்களுக்கு முன்னே இருபுறமும் வீடுகள் கொண்ட சிறிய தெரு ஒன்று காணப்பட்டது. இதிலிருந்து, பனி ரஸ்தாவின் குறுக்கே அடித்து வரப்பட்டது என்றும், அதனாலேயே அவர்கள் பனி ஓட்டத்தில் புகுந்து புறப்பட வேண்டியதாயிற்று என்றும் தோன்றியது, உண்மையும் அதுதான்.
பனியில் புகுந்து கடந்த பிறகு அவர்கள் ஒரு தெருவை அடைந்தார்கள். ஊரின் கடைசியிலிருந்த ஒரு வீட்டில், கொடி ஒன்றில் தொங்கிய துணிகள் சில—சிவப்புச் சட்டை ஒன்று, வெள்ளைச் சட்டை ஒன்று, கால் சட்டைகள், கால்பட்டைகள், ஒரு பாவாடை ஆகியவை—பனியில் உறைந்து காற்றில் வெறி ஆட்டம் போட்டுக்கொண்டிருந்தன. முக்கியமாக அந்த வெள்ளைச் சட்டை தனது கைகளை வீசி வீசி மூர்க்கமாகப் போராடிக் கொண்டிருந்தது.
‘இங்கே பாரேன். எவளோ ஒரு சோம்பேறி அம்மாள் அல்லது செத்துத் தொலைந்தவள் பண்டிகைக்கு முன்னாடியே தனது உடுப்புகளை எடுத்து வைக்காமல் இருந்துவிட்டாளே’ என்று நிகிட்டா, காற்றில் அலைப்படும் சட்டைகளைப் பார்த்துக்கொண்டே பேசினான்.
3
தெரு முனையில் இன்னும் காற்று வெகுண்டு வீசிக் கொண்டு தானிருந்தது. ரோடு கனத்த பனிப்போர்வை அணிந்து கிடந்தது. ஆனால் ஊருக்குள்ளே அமைதியும் ஆனந்தமும் கதகதப்பும் நிலவின. ஒரு வீட்டில் நாய் ஒன்று குறைத்துக் கொண்டிருந்-