உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:டால்ஸ்டாய் கதைகள்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

1.

இரண்டு பேர்

Page வார்ப்புரு:Custom rule/styles.css has no content.Script error: No such module "Custom rule".

குளிர்காலத்தில், புனித நிக்கலஸ் திருநாளுக்கு மறுதினம், அது நிகழ்ந்தது. அந்த வட்டாரம் பூராவும் அன்று ஒரே கொண்டாட்டம்தான்.

விடுதித் தலைவன் வாஸிலி ஆன்ட்ரீவிச் பிரகுனோவ் பிரபலமான வியாபாரி. அவன் மாதா கோயிலின் பிரதானியாக இருந்ததனால் அன்று கோயிலுக்குப் போகவேண்டியது அவசியமாயிற்று. அதேபோல், உற்றார் உறவினர்களையும் நண்பர்களையும் தனது வீட்டில் உபசரித்து அனுப்ப வேண்டிய அவசியமும் அவனுக்கு ஏற்பட்டிருந்தது.

ஆனாலும், வந்திருந்தவர்கள் அனைவரும் விடை பெற்றுச் சென்ற உடனேயே அவன் பிரயாணம் போவதற்குரிய ஏற்பாடுகளைச் செய்யத் தொடங்கினான். பக்கத்து ஊரில் உள்ள நிலச் சொந்தக்காரன் ஒருவனை, ஒரு தோப்பு விஷயமாகக் கண்டு பேசக் கிளம்பினான் அவன். நீண்ட நாட்களாக அவன் பேரம் பேசி வந்த விவகாரம் அது. தனக்கு லாபகரமான முறையில் அந்த பேரம் முடியாதபடி, நகரத்திலுள்ள வியாபாரிகள் முந்திக்கொண்டு காரியத்தைக் கெடுத்து விடக்கூடாதே என்ற அவசரம் அவனுக்கு.

இளைஞனான நிலச் சொந்தக்காரன் அந்தத் தோப்புக்கு பத்தாயிரம் ரூபிள்கள் கேட்டான். வாஸிலி ஆன்ட்ரீவிச், ஏழாயிரம் தருவதாகச் சொன்ன காரணத்தினாலேயே அவன் அவ்வளவு கேட்டுக் கொண்டிருந்தான். பார்க்கப்போனால், ஏழாயிரம்

64—2