8 ஒருவனுக்கு ஒருத்தி என்ற நிலை இல்லை ஆயிற்று. பொதுமகளிரும் பலர் ஆகவே, ' கற்பு " என்பது புகழ்ச்சிக்குரிய பண்பாக இருந்ததேயொழிய, உண்மையில் கடைப்பிடிக்கப்பெறவில்லை என்று மேனாட்டவர் ஒருவர் எழுதியதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். இத்தகைய பதியிலார்க்கும் காமக்கிழத்தியர்க்கும் பிறந்த குழந்தைகளும் உண்டு." அந்நாட்களில் சாதிகள் பல. அவர்களிடையே கல்யாணம் முதலியன நடைபெறுங்கால் சில வேறுபாட்டுணர்ச்சி ஏற்படுவது இயல்பு. அச் சாதியினர் வலங்கை என்றும் இடங்கை என்றும் பேசப்பட்டனர். ஒவ்வொரு பிரிவிலும் 98. சாதிகள் இருந்தன. அவர்களுக்குள் சச்சரவுகள் ஏற்பட்டன. அரசு தலையிட வேண்டிவந்தது. இந்நாட்டுச் சமயங்களாகிய சைவ வைணவங் களைத் தழுவிய மக்களிடையே முகமதியர் தம் மதத்தைப் பரப்பினர். அவர்களுடைய தொழுகை இடங்களும் தோன்றின. மேனாட்டார் இந்நாட் டுக்குப் போந்ததும் கிறிஸ்தவ மதம் பரவலாயிற்று. தொடக்கத்தில் கிறிஸ்தவர் தொல்லைக்கு உள்ளானமை பெரிதும் பேசப்படுகிறது. இருப்பினும் தாழ்ந்ச தாதியினர் பலரும் கிறிஸ்தவ சமயத்தைத் தழுவினர். கிறிஸ்தவர்க்குரிய வழிபாட்டிடங்களும் கட்டப்பெற்றன. இங்ங்னம் சைவம் வைணவம் கிறிஸ்தவம் இஸ்லாம் மதங்களைத் தழுவிய மக்கள் ஒருங்கு வாழும் நிலைமை தொடங்கியது சைவ சமய மடங்களும், பிராமண மடங்களும் பல தோன்றலாயின. பிரதாபசிங்கர் காலத்தில் காஞ்சி காமகோடி பீடாதிபதிகள் கும்பகோணத்துக்கு வருவிக்கப்பட்டார். அங்கு ஒரு மடமும் நிறுவப்படலாயிற்று. திருப்பனந்தாள் காசிமடம் தஞ்சை மராட்டிய மன்னர்களுடன் நெருங்கிய தொடர்பு உடையதாக இருந்தது எனத் தெரிகிறது. இரண்டாம் சரபோஜி காசி யாத்திரை செய்த பொழுது காசியில் உள்ள குமாரசுவாமி மடத்தில் தங்கியிருந்தார். தருமபுரம், திருவாவடுதுறை முதலிய மடங்களின் மேற்பார்வையில் பல திருக்கோயில்கள் திகழலாயின. வைணவ மடங்களும் சிறப்புற்றிருந்தன. கர்நாடக இசை மேலோங்கியிருந்தது. இக்காலத்தில் பல இசை நாடக நாட்டிய நூல்கள் பல மொழிகளிலும் எழுதப்பெற்றன. அரண்மனையில் விநாயக சதுர்த்தி திருவிழா 21 நாட்களிலும் நாடோறும் ஒரு நாடகம் வீதம் நடிக்கப்பெற்றது எனில் நாடகங்களுக்குச் சிறந்த ஆதரவிருந்தது என்பது தெரிகிறது. மேனாட்டவரின் இசையும் பரவியது. சமஸ்கிருதம், 1. " Vico viciously observes that chastity was virtue more admired than practised by the Indians” - p. 283, History of Tamil Nad-Subramanian, N. Koodal Publishers, Madurai (1982). 2. " The inhabitants of those places make but little account of their wives but generally keep two or three harlots by whom they have sometimes 16 or 18 children o’ - p. 283, History of Tamil Nad - N. Subramanian.
பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/18
Appearance