உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37 சிட்னிஸ், பல்லாஜி ஆவுஜீ என்பவரின் கையெழுத்துடன் ஒப்பிட்டுப் பார்த்தேன். இக்கடிதங்கள் உண்மையானவையே என்று கொள்ளல்தகும்' என எழுதியுள்ளார். இக்குறிப்பினால் அவ்விரு கடிதங்களின் உண்மைத்தன்மை புலப்படுவ தோடு முதற் கடிதம் எழுதப்பெற்றதற்கு முன் மேலும் இரண்டு கடிதங்கள் சிவாஜி அனுப்பினார் என்பது போதரும். வெங்காஜி அல்லது ஏகோஜி என்பார் ஷாஹஜியின் (Shahaji) புதல்வருள் ஒருவர் ஷாஹஜியின் இரண்டாவது மனைவியாகிய துக்காபாயி மோஹிதேயின் வயிற்றில் பிறந்தவர். சத்திரபதி சிவாஜியோ ஷாஹஜியின் முதல் மனைவி ஜிஜாபாயின் மகன் ஆவர். ஷாஹஜிக்கு வெங்காஜியிடம் மிகுந்த அன்பு இருந்தமையால் ஷாஹஜி தன் நாடுகளை வெங்காஜிக்கு அளித்து, அவர்க்கு உதவியாக இருக்குமாறு தன் அமைச்சர்கள் ரகுநாத் நாராயண், ஜனார்த்தன நாராயண் ஆகிய இருவரையும் அனுப்பிவைத்தார். ஷாஹஜி 1674இல் இறந்ததும் பிஜபூர் சுல்தான் ஷாஹஜியின் இடத்திருந்த ஜாகீர்களை வெங்காஜிக்கு உரிமையாக்கினார். கி. பி. 1676இல் வெங்காஜி தஞ்சை அரசன் ஆனார். வெங்காஜிக்கும் ரகுநாதுக்கும் மனவேற்றுமை உண்டாயிற்று. ஆகவே ரகுநாத் பந்த் வெங்காஜியை விட்டுச் சிவாஜியை அடைந்தார்; சிவாஜி தென்னாட்டின் மேல் படையெடுத்தபோது சிவாஜிக்கு உதவியாயிருந்தார். சிவாஜி, தென்னாட்டுப் பகுதியைத் தனக்கு அடங்கியதாக ஆக்க விழைந்தமையோடு, தன் இளவலாகிய வெங்காஜியிடம் இருந்த தம் தந்தையின் ஜாகீர்கள், செல்வங்கள், யானை குதிரைகள், அணிகலன்கள் ஆகியவற்றுள் தனக்குப் பாதிப்பங்கு சேரவேண்டும் என்று விரும்பினார்; தந்தை இறந்த பின்னர் 13 ஆண்டுகள் வரையில் பொறுத்திருந்தார். கி. பி. 1677இல் தென்னாட்டின்மேல் படையெடுத்தபொழுது ஆரணியை முற்றுகையிட்டுத் திருவதியில் தங்கியிருக்கையில் சிவாஜி வெங்காஜிக்குக் கடிதம் எழுதினார். அதில் தம் தந்தை இறந்தது முதற்கொண்டு தம் தந்தைக்குரியதாயிருந்த எல்லா நாடுகளும் 13 ஆண்டுகளாக வெங்காஜியிடமே இருக்கின்றன என்றும், அவற்றுள் பாதிப்பங்கு தனக்கு உரிமையுண்டு என்றும், கோவிந்தபட், காகாஜி பந்த், நீலோ நாயிக், ரகுநாத்நாயிக், தோமாஜி ஆகியவர்களைத் தன்னிடம் அனுப்பி வழக்கினைத் தீர்த்துக்கொள்ளவேண்டும் என்றும் எழுதினார். வெங்காஜி நன்கு சிந்தித்த பிறகு, சிவாஜியைக் காண்பதற்குத் திருவதிக்குச் சென்றார். சிவாஜி அரசநிலைக்கு ஏற்ப வெங்காஜியை