உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

jv விட்டு வைக்கப்பட்டன என்றும், அவை பயனற்றவை; அழித்தற்குரியன என்று கருதப்பட்டன என்றும், அவற்றைத் தஞ்சைப் பெருமக்கள் அழிக்கக் கூடாது என்று தடுத்தமையால் அவை சரஸ்வதிமகாலில் பேணிக் காப்பாற்றப் பெற்று வருகின்றன என்றும், அவற்றுள் சில மோடி ஆவணங்கள் 11 சுவடி களில் மராட்டிய மொழியில் எழுதப்பெற்று அவற்றுள்ளும் சில தமிழில் பெயர்க் கப்பட்டன என்றும், மேலும் ஒவ்வொரு சுவடியிலும் சராசரி 50 பக்கங்கள் கொண்டனவாயுள்ள 48 சுவடிகளில் 1977-78இல் பல மோடி ஆவணங்களின் சுருக்கம் எழுதப்பெற்றுள்ளன என்றும் தெரியவந்தன. ஆய்வுப் பணி மேலேகண்ட 11 கையெழுத்துச் சுவடிகளையும், 48 கையெழுத்துச் சுவடிகளையும் ஒரு முறை வேகமாகப் படித்துக் குறிப்புக்களை எடுத்துக் கொண்டபொழுது 18, 19ஆம் நூற்றாண்டின் சமுதாய வாழ்க்கையை அறிய முடியும் என்ற கருத்து வேரூன்றியது. இதனை மாண்புமிகு துணைவேந்தர் அவர்கள் திருமுன் தெரிவித்துக் கொண்டேன். அவர்களும் ஒருமுறை சரஸ்வதிமகாலுக்குச் சென்று மோடி ஆவணக்கட்டுக்களையும், மோடி தமிழாக் கக்கையெழுத்துச் சுவடிகளையும் நோக்கி, அங்ங்னமே அவ்வாவணங்களின் துணை கொண்டும், தொடர்புைடய நூல்களைப் படித்தும் "தஞ்சை மராட்டிய மன்னர் அரசியலும் அவர்கள் காலச் சமுதாய வாழ்க்கையும் ' என்ற தலைப்பில் நூலை எழுதுவதற்கு ஒப்புதல் அளித்தார்கள். மேலும் மேற்குறித்த 11 கையெழுத்துச் சுவடிகளில் உள்ள தமிழாக்கப் பகுதிகளையும், மோடி ஆவணங்களினூடே காணப்பெற்றனவாயும் தஞ்சை சரஸ்வதி மகாலில் படி யெடுத்து வைக்கப்பெற்றுள்ளனவும் ஆன தமிழ் ஆவணக் கையெழுத்துச் சுவடி (எண் 1638) யையும் தொகை கொடுத்துப் படியெடுத்துப் பெற ஆணை யிட்டருளினார்கள். அங்ங்னமே அப்பன்னிரண்டு சுவடிகளும் 7 சுவடிகளில் படியெடுத்துத் தரப்பெற்றன. மோடி ஆவண மொழிபெயர்ப்பு மேலும் சில மோடி ஆவணங்களை மொழிபெயர்ப்பின் பல செய்திகள் கிடைக்கக்கூடும் என்று கருதித் திருமதி பத்மாவதிபாய் என்ற ஒருவர், மோடி எழுத்துப் பெயர்ப்பாளர் ஆக நியமனம் செய்யப் பெற்றார். அவர் 13-5-1982 முதல் 9-10-1682 வரை சில மோடி ஆவணங்களைத் தமிழில் மொழி பெயர்த்தார். அவை 9, 10, 11, 12, 13 என்ற எண் கொண்ட சுவடிகளாக உள்ளன. திருமதி எஸ். பத்மாவதிபாய் மொழிபெயர்ப்புச் செய்யுங்கால் மோடி ஆவணங்களின் இடையே கிடைத்த தமிழ் ஆவணங்கள் அரிய கையெழுத்துச் சுவடித்துறை முதுநிலை ஆய்வாளர் டாக்டர் திரு. ம. சா. அறிவுடைநம்பி யாலும் என்னாலும் படியெடுக்கப்பெற்றன. அவை இங்கு எட்டாவது சுவடியாகும்.