உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தந்தையும் மகளும்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20

தந்தையும்

நாட்களுடன் சேர்த்தார் இவ்வாறு பிப்ரவரி மாதம் நாட்கள் குறைந்ததாக ஆகிவிட்டபடியால் அறிஞர்கள் லீப் லருஷத்தில் பிப்ரவரி மாதத்துக்கே ஒரு நாளைக் கூட்டும்படி சொல்லுகிறார்கள்.

இவ்வாறு நான்கு வருஷத்துக்கு ஒரு முறை ஒரு நாளைக் கூட்டினால் அப்பொழுது வருஷம் 11 நிமிஷம் 14 செக்கண்டு அத நேரம் உடையதாக ஆகி விடுகிறது. அதற்காக அறிஞர்கள் நானூறால் மீதியின்றி வகுக்கக்கூடிய நூற்றாண்டு வருஷம் தவிர ஏனைய நூற்றாண்டு வருஷங்களை லீப் வருஷமாகக் கருதுவதில்லை. ஆதலால் 1900 நாலால் வகுக்கக் கூடியிருந்தும் லீப் வருஷமாகாது. ஆனால் 2000 நானூறால் வகுக்கக் கூடியதாக இருப்பதால் லீப் வருஷமாகும்.

6அப்பா! ஆண்டுகளைச் சொல்லும்போது கி. பி. கி. மு. என்று கூறுகிறார்களே, அதற்குக் காரணம் என்ன?

அம்மா! நாம் 1952-ம் வருஷம் என்று கூறுகிறோம்.அதன் பொருள் என்ன? அம்மா நீ இயேசுகிறிஸ்து என்று கேட்டிருப்பாய். அவர் ஒரு பெரிய மகாத்மா, அவர்தான் கிறிஸ்தவ மதத்தை நிறுவியவர். 1952-ம் ஆண்டு என்பதன் பொருள் இயேசுகிறிஸ்து பிறந்த நாளிலிருந்து 1951 வருஷங்கள் சென்றுவிட்டன. இப்போது 1952-ம் வருஷம் நடக்கிறது என்பதாகும். இப்படி கிறிஸ்து பிறந்தபின் உள்ள வருஷத்தைக் கிறிஸ்துவுக்குப் பின் 1952 என்று சொல்வதற்காகச் சுருக்கமாக கி.பி. 1952 என்று கூறுவார்கள். அதுபோல் கிறிஸ்து பிறப்பதற்கு முன்னுள்ள வருஷத்தைக் குறிப்பிட கி.மு. என்று கூறுவார்கள்.

இவ்விதம் ஏதேனும் ஒரு முக்கியமான நிகழ்ச்சியிலிருந்து ஆரம்பித்துக் கூறும் ஆண்டு முறையைச் சகாப்தம் என்று சொல்லுவார்கள். நம்முடைய நாட்டிலும் சாலி-