உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழகக் குறுநில வேந்தர்கள்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ix

உரையை மறுக்கும் அதே நேரத்தில், புது மாணாக்கர்களின் கருத்துக்கு மதிப்பும் தருவார். சமரச சன்மார்க்கவாதி. பிறப்பில் வைணவ அந்தணராயினும், ஆண்டுதோறும் சைவ சித்தாந்தக் கழகச் சொற்பொழிவுகளில் சைவ சமயக்குரவர்களின் பேரிலக்கியத்தைப் புகழ்வார். தானம், தயை, தபஸ் என்ற மூன்றும் இஸ்லாமிய அன்பர்களின் பெருநாள் நோன்பில் எவ்வாறு வெளிப்படுகிறது என்று காட்டுவார். தேம்பாவணி போன்ற கிறிஸ்தவ இலக்கியத்தைப் பெரிதும் பாராட்டுவார். எல்லாவித உண்மைகளையும், எங்கிருந்தாலும் அறியும் ஆர்வம் இருந்தது. இவர் ஆராய்ச்சிக் கட்டுரைகள் இதற்குச் சான்றாக அமைவன.

வாழ்க்கையில் வறுமையால் பன்முறை அல்லற்பட்ட பொழுதும் ஆராய்ச்சியையும், பதிப்பித்தலையும் ಡ இல்லை. பகவானே மகாபலியிடம் மூன்றடி மண் யாசித்த பொழுது உடல் குறுகி பெற்றவர்களே நகையாடும் படியான தோற்றத்தில் வாமனனாய் அமைந்தான் என்றால் சாதாரண மனிதர்கள் எவ்வளவு கூனிக்குறுக வேண்டும் என்றுகூறிக் கம்பாாமாயணத்தில் அப்பகுதியைக் காட்டுவார். தம்மைப் புரந்த சேதுபதி மன்னர்களையும், இராஜா சர். அண்ணாமலைச்செட்டியாரையும், கம்பன் சடையப்ப வள்ளலைப் புகழ்ந்ததுபோல் கவிபாடி நன்றிக் கடனைத் தீர்த்தார். பெண்களிடமும், பெண் கல்வியிலும் பெருமதிப்பு வைத்தவர். சங்க இலக்கியத்தில் கண்ட பெண் புலவர்களை “நல்லிசைப் புலமை மெல்லியலார்கள்” என்ற துலை எழுதி உலகுக்கு அறிவித்தார்.

இவர் சிறந்த நாவலர். மகாவித்துவான் என்ற பட்டம் தமிழ்த்தாத்தா உ.வே. சாமிநாதய்யரால் அளிக்கப்பட்டது. வடமொழி அன்பர்கள் நிறைந்த சமஸ்கிருத சமிதி “பாஷா கவிசேகரர்” பட்டம் அளித்து கெளரவித்தது. மூன்று சோழப் பேரரசர்கள் அவையில் ஆஸ்தான வித்துவானாக இருந்த ஒட்டக்கூத்தன்போல் இவரும் மூன்று சேது