உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழகக் குறுநில வேந்தர்கள்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ரா.இராகவய்யங்கார்

13

கடந்துள்ள கீழ்கடனாட்டுச் சீயப் புறத்துத் துவராவதியும், நாவலந்தீவின் கீழ்கடற்கரையில் முசலிக்கும் (கிருஷ்ணவேணி) கோதாவரிக்கும் இடையில் மேற்றிசையாசிரியர் தாலமி முதலியோர் கூறிய கோத்வரா என்பதும் (மாக்ரிண்டில் தாலமி, பக்கம் 66), காச்மீர தேயத்து ஐயபுரமாகிய துவராவதியும் (ராஜதரங்கணி - 4.511) அத்தேயத்தே துவாரவதிப் பற்றிலுள்ள வராகமூலத்துவாராவாற் பெயரெய்திய துவாரவதியும், காம்போகத் தலைநகராகிய துவாரகா என்பதும் (Buddhist India பக்கம்-28) ஆகும். இன்னும் ஒரு சாரார் துவரைக் கோமான் என்னும் தமிழ்ச் சங்கப் புலவர் பெயர் வழக்கினைத் துணையாகக் கொண்டு பாண்டி நாட்டுத் துவாாபதி நாடும் துவரங்குறிச்சியும் ஆமென்று துணிதலும் உண்டு. கபிலர் ஆடபற்றுவரை யாண்டு தென்பால் வந்த வேளிர் என்று கொள்ள வைத்தற்கு இஃது இயையாமையால் இவர் துணிவு பொருந்தா தாகும். அன்றியும் சங்ககாலத்து ஒளவையாராற் பாடப்பட்ட அம்பர்கிழான் அருவந்தைக்கு நெடுஞ்சேய்மையனாகாத சேந்தன் பெயராற் செய்யப்பட்ட நிகண்டில், திவாகரர் இதையே குறிப்பர் (தொல். செய். பேராசிரியருரை)

"கொடியணி யேனம் பொடியணிந்து கிடப்ப
வடதிசை வாகை சூடித் தென்றிசை
வென்றி வாய்த்தவன்றாற் விடலை”

(தொல். செய். பேராசிரியர்)

—எனப் பாடப்படுதலாலும் இவ்வுண்மை உணரலாம். “வேள்குலத்தரசர்”, “வேள் குலச் சாளுக்கியர்” என்பவற்றாற் சாசனங்களும் (S.I.I, Nos. 28, 73) இவ்வடதிசைச் சாளுக்கியரை வேள் குலத்தவராகக் கூறுதல் காணலாம். பாடலும் சாளுக்கியர்க்குரிய ஏனக்கொடியைப் (வராகத்துவசம்) புழுதியில் வீழ்த்திய செய்தியை வடதிசை வாகை சூடியதாகக் கூறுதல் தெளிக.