14
தமிழகக் குறுநில வேந்தர்கள்
"கொல்விக்கும் யானை கொடு சாளுக்கி
வர்க்கமற , வேளுக்கிராமமிடறி"
(குலோத்துங்க சோழ தேவர் பிள்ளைத் தமிழ், 12)
என்பதனாற் சாளுக்கிய வர்க்கம் வதிதவூர் வேள்கிராமம் எனப்பட்டதறியப் படுதலாலும் இவ்வுண்மையுணரலாம். கபிலர் காலத்திற்கு முன்னே இவ்வேள்புல வேந்தர் தமிழ் நாட்டில் துவரை என்னும் ஒரு ஊரைத் தலைநகராகச் செய்து 49 தலைமுறை ஆண்டனர் என்பதற்கு நூலும் சாசனமும் இல்லாமையுங் காண்க.
கண்ணிபிரான் வதிதருளிய துவாரகாவை நோக்கின் அது தம்மைத் "துவாரவதி புரவராதிச்சவர்" என்று கூறிக் கொள்ளும் யாதவகுல ஒய்சளர்க்குப் பொருந்துவதல்லது வேள்.குலத்தவர்க்கு இயைவது ஆகாதென்க. ஒய்சளர் தம்மை வடபான் முனிவன் தடவினுட் தோன்றியவராகக் கூறாமையும் உணர்க. மைசூரைச் சார்ந்த துவார சமுதிரம் மேற்குறித்த ஒய்சளர் தலைநகராதலால் வேள் குலத்தவர்க்கு இயைவதன்று. இவ்வூர் வடபாலில்லாது. தகூஜிணைபதத்தேஇருப்பதும்ஈண்டைக்கு நினைக்கத்தகும். இவ்வூர் இக்காலத்து "ஹேள்பீட்" என வழங்குதலான் இது வேள்வீடு என்பதன் மரூஉப்பெயராகக் கொள்ளப்படுமெனின் அது ஒய்சளரை வென்று பிற்காலத்துச் சாளுக்கியர் ஆண்டு வதிதனையே குறிக்குமென்க. மற்றும் கீழ் கடனாட்டுச் சீயப்புறமாகிய துவாரவதி வடநாட்ட தாகாமை நன்கறியலாம். இவ்வூரையுடன்படின் இத் தெக்ஷிணைபதத்து நாகரீகம் ஆண்டுப் புக்கதென்பது சாசன பரிசோதகர் துணிபாகவும் அதனொடு பகைத்து ஸ்வர்ணதிவப் பக்கத்து நாகரீகம் ஈண்டுப் புக்கதெனது கொள்ள நேரும் என்க. இனித் தாலமிகுறித்த 'கோத்வாரா'வும் இவ்வேளிர் தென்னாடு வருவதற்கு முன்னர் ஆண்ட துவரையாகாமை அது தெக்ஷிணைபதத்தே இருத்தலான் அறியலாம். இது கீழ்பாற் சாளுக்கியர்