ரா.இராகவய்யங்கார்
19
விடமாக்கி, அவ்வந்நாகப்பெயரால் வழங்குவர். இந்நாட்டு மொழியில் நீர்நிலைகள் "நாகு" என்று பெயர் பெறுதற்கும் இவ்வழக்கமே காரணமாகும். பத்ம நாகு வேளுர் ஏரி), வேள் நாகு (நீலகுண்டம்), விஸ்ரவஸ் ஏரி (சேஷ நாகு), க்ஷீரதீர்த்தம், (ஜாமா தினாநாகு) என்று வழங்கலான் இவ்வுண்மை அறிக. இந்நாடு ஆதிதொட்டு நாகர் வழிபாடு மிகுந்ததென்றும். இக்காரணத்தால் இது நாகநாடெனப்படுமென்றும் கொள்ளப்படும். இதற்கியையவே மணிமேகலை நூலுட் காந்தார தேசத்தின் கீழ்த் திசையில் நாக நாடிருப்பதாகக் கூறுதல் காணலாம். இதனைக்,
காந்தார மென்னுங் கழிபெரு நாட்டுப்
பூருவ தேயம் பொறைகெட வாழும்
அத்தி பதியெனு மரசாள் வேந்தன்
மைத்துனனாகிய பிரம தருமன்
ஆங்கவன் றன்பா லணைந்தற முரைப்போன்
தீங்கனி நாவ லோங்குமித் தீவிடை
இன்றேழ் நாளி னிரு நில மாக்கள்
நின்று நடுக்குறு உம் டோழதத் திந்நகர்
நாக நன்னாட்டு நானூறு யோசனை
வியன்பா தலத்து வீழ்ந்துகே டெய்தும்"
(மணிமேகலை-9)
என்பதனாலறியலாம். இதன்கட் காந்தாரதேய்த்திற்குப் பூருவதிக்கில் (கீழ்த் திசையில்) நாக நாடுள்ளதாகக் கூறியிருத்தல் காண்க. (கண்ணிங்ஹாம் எழுதி பூர்வீக இந்திய பூகோளம், பக்கம். 52 பார்க்க) இந்நாக நாட்டை வளம் பெறச் செய்யும் விதஸ்தா நதி (ஜேலம்) வேள் எனப் பெயர் பெறுவது என்பது இன்றைக்குங் கேட்கப்படுவதாகும். இவ்வுண்மையை எட்வர்ட்தாரண்டன் துரை எழுதியது காண்க . (Veyal, The name given to jhelum in the uppu parts of ts course; 1886 -பதிப்பு, பக்கம் 979), இந்நதி நீல