உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழகக் குறுநில வேந்தர்கள்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ரா.இராகவய்யங்கார்

29


ஊர் இவர் முன்னையோர் வென்றியிற் பெற்ற பாரத்துவசத்தையுடையரெனத் துணியலாம். காச்மீரம் ஆண்ட மேகவாகன வேந்தன் (B.C. 24) கடற்கப்பாலுள்ள கரையில் நாடு வென்றதற்கறிகுறியாக அவனுக்கு இலங்கையரசன் பணிந்து தந்தது பாரத்துவசமென்பது (III, 78) ராஜதரங்கினியாற்றெரியலாம்.

இனி இருங்கோவேளைக் கபிலர் பாடிய க்ஷ புறப்பாட்டில் நாற்பத்தொன்பது என்பதனை நான்கு பத்தொன்பதாகக் கொண்டு எழுபத்தாறாக்கி அவ்வெழுபத்தாறாம். வழிமுறையை இத்தென்னாட்டு வேளிர்க்குத் தலைமையாகக் கூறினும் தரங்கினி நூலிற் கியைவதேயாகும். அது காட்டுவல், சலெளகன் 49 ஆமவன் என்பது முன்னரே கூறினேன். அவன் பின்னர் 27 அரசர்களைக் கூறி முதற்ற ரங்கம் முடிவது தரங்கினியிற் றெளியக் காணலாம், முதற்ற ரங்கத்திறுதியில் 76-ஆம் அரசனாகக் கூறப்பட்டவன் யுதிஷ்டிரன்-1 என்னும் பெயரினன் என்றும் அவன் விழிகள் மிகச் சுருங்கியிருந்தமையால் அந்த ராஜன் (குருட்டு வேந்தன்) என அழைக்கப்பட்டனன் என்றும் அவன் தனக்கில்லாத பெருமிதங்களை ஏறிட்டு மந்திரிகளைப் பழித்து ஒழுகினனென்றும், அவனை அமைச்சரும் குடிகளும் வெறுத்து நாட்டை விட்டோட்டினரென்றும், அவுன'வேற்றரசர் நாட்டிற் புக்கிருந்தனனென்றும் அம்முதற்றரங்கங் கூறி முடிக்கும். இரண்டாமரங்கத் தொடக்கத்தில் அவ வந்த ராஜன் திரும்பவும் அரசெய்த விழைந்தனனென்றும் அவனுக்கு உசாத்துணையாயினராயுடனமர்ந்த உழையர் அவனைத் தடுத்து, அவன் முதிர்ந்த வயதிற்குத் தக்கபடி எல்லாவற்றையுந் துறந்திருக்க வேண்டி அவனைத் துர்க்கலிகா என்ற இடத்திலே வைத்தனரென்றுங் கூறும் வாயுபுராணம் (5.1.24-128) தெற்கணுள்ள நாடுகளைத். தொகுக்குமிடத்துப் பாண்டிய, கேரள, சோள தேசங்களுடன் சூர்ப்பாகரம், கோளவனம், துர்க்காகளிகை என்பவற்றையுங் கூறுதலான் இது தென்னாட்டுள்ளது தெரியலாம்.