பக்கம்:தமிழில் இஸ்லாமிய இலக்கிய வடிவங்கள்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

35

யேனும் இகழ்ந்தவர்; மார்க்கத்திற்கு ஒவ்வாத வாணிபம் செய்தவா; அறிவாளிகள் சொன்னதை அசட்டை செய்தவர் அடிமைகளுக்கு அறக் கொடுமை செய்தவர் தீன்நெறி பகைத்தோர்; நம்பியவரை மோசம் செய்தவா, இறை ஏவலைக் கடந்து ஈனவழி; சென்றவர் அறுஷைப் படைத்த ஆண்டவனுக்கு அஞ்சி தவுபா(பாவ மன்னிப்பு) செய்யாதவர் சூனியங்கள், வஞ்சனை செய்தவர் பெரியோரைப் போற்றாதவர்; சிறுவர்க்குப் புத்தி சொல்லாதவர்; அநியாயம் என்று தெரிந்தும் அதிலிருந்து விலகாதவர்; ஆகியோர் கொடிய நரகில் தள்ளப்படுவர் என அச்சுறுத்தி எச்சரிக்கை செய்கிறார்.

இன்னும் நரகம் அமைந்திருக்கும் சூழலையும், அங்கு தவறு செய்தோர் எவ்வகையான நகர வேதனை அடைவர் என்பதையும் விளக்கமாகவும் நுணுக்கமாகவும் எடுத்துரைக்கிறார். இவைகளைப் பற்றிப் படிக்கும்போதே படிப்போர் ஒருவித அச்சத்துக்கு ஆட்படுவர்; தவறின் பக்கம் தலை வைக்காமல் மனம் தடுத்தாட்கொள்ளுகிறது இறை வழியில் நேர்மையாக வாழ உள்ளம் அவாவுகிறது.

-மது இஸ்லாத்தில் அறவே விலக்கப்பட்ட ஒன்று. மது உண்போர் அறிவு மயங்கி, மதங்கொண்ட யானையின் நிலையில் இயங்க முனைவர். மது அருந்தியதால் உணர்வு பிறழ்ந்து தீமை பல செய்ய தூண்டுதல் பெறும் ஆடவர் எரி நரகில் மிகப் பல துன்பங்களை அடைவர் என்பதைச் சுட்டிக்காட்டிய வண்ணப் பரிமளப் புலவர், பெண்கள் மதுவுண்டால் இம்மை வாழ்வில் நரகில்படும் கொடுந் தண்டனைகளை விளக்கும்போது.

"மதமுறு மதுவையுண்ட மாந்தர்கள்
                  வயிற்றின் மீதே