உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழ்ப்புலவர் சரித்திரம்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

472 வி. கோ. சூரியநாராயண சாஸ்திரியாரியற்றிய (முதற் - . - தமிழ்.நூற் பதிப்பு இது நிற்க. குடந்தையிலிருந்தபொழுது அச்சிடப்படாத 1,ல அருமை யான தமிழ் நூல்களைப் பனையோலைச் சுவடிகளைக் கொண்டு பரிசோதித்துப் பதிப்பிக்கத் தொடங்கினர். அவ்வாறு அவர் பதிப்பித்த நால்களுட் பெரும்பாலன சாமானிய சனங்கள் 212:9லா தன வும் அதிகமாய் விலைப்படா தனவுமாகிய இலக்கண தால்களாம். தமிழின் மீது ஆர்வம் மிகுந்த இற்றை ஞான்றிலும் அலைகள் பெரிதும் கவனிக்கப்படுகின் றிலவாமாக அங்காட் களில் அவை விலைப்பட்டில் என்பதோர் ஆச்சரியமன்று. அன்னணம் அவர் பிரசுரித்த இலக்கண கால்கள் தொல்காப்பிய நச்சினார்க்கினியம், தொல்காப் பியச் சேனாவரையம், வீரசோழியம், இறையனாரகப் பொருளுரை, இலக்கண விளக்கவுரை என்பனவாம். சங்க நூல்களில் எட்டுத் தொகையுள் ஒன்றாகிய கலித்தொகையும் இவர் பதிப்பித்ததே. பின்னர்த் தமிழிலக்கியங்களுட் பெரி தும் திரிசொற்களோன் பாக்கப்பட்ட தணிகைப்புராணமும் சிறு காப்பியம் களுள் ஒவ்றெனக் கருதப்படும் சூளாமணியும் பிள்ளையவர்கள் முயற்சியால் வெளிப்போந்தன. இவை தம்முட் பல .குதிகள் பிரதம கலாபர்ட்சைக் கும், பி ஏ., எம். ஏ., பரீட்சைகட்கும், அவ்வக் காலங்களிற் பாடங்களாய் ஏற்படுத்தப்பட்டவ, இவர் பதிப்பித்த நூல்களெல்லாம் இவரது சங்கச் செய்யுட் பழக்கத்தினையும், துறுகியுணருங் கூரிய மதியினையும், ஆராய்ச்சி வன்மையினை 14,ம் பெரிதும் புலப்படுத்துகின்றன. அவ்வர் கால்களின் பதிப் புரைக்கட் பல அரிய பெரிய விடயங்களைச் சிக்கறவாராய்ந்து தெள்ளிதிற் றெரித்தாளர். இவர் தமது இறுதிக்காலத்தில் எட்டுத் தொகையு னொன்றாகிய அகநானூற்றினைப் பரிசோதித்து வந்தனர். ஐயகோ ! அகப்பாட்டு அகப்பாட் டாகவே நின்றது. புலவர் மதிப்பு இவ்வாறு மிகப் பெருமை வாய்ந்த நூல்களைப் பரிசோதித்துப் பதிப் பித்தமை காரணமாக இவர்க்குப் புகழ் மிகுவதாயிற்று. தமிழ்ப் புலவர்களி டத்து மிக்க நன்கு மதிக்கற்பாடுற்றனர், பற்பல நாட்டுத் தமிழ்ப் பண்டிதர் களும் இவரைச் சலஞ்சலத்தைச் சூழும் வலம்புரியெனச் சூழ்வாராயினர். பரீட்சிக்குந் திறமை இத்தகைய புலவர் பெருமானது ஆற்றலும் நல்லொழுக்கமுங்கண்டு சென்னைச் சர்வகலாசாலையார் இவரைப் பரீட்சைக் கர்த்தராகப் பல்லாண்டு களில் நியமித்தனர். இவர் அங்ஙனம் அத்தொழில் புரியுமிடத்துத் தமக் கியல்பாயுள்ள நேர்மையும் மாணவரிடத்து இரக்கமுங் காட்டியே வந்தனர். சென்னைச் சர்வ கலா சாலையில் தமிழ்ப் பரீட்சைக் கர்த்தர்களாயிருந்த கன வான்களெவரும் இவரது கல்விக்கு ஈடாலாரல்லர். இவர் பரீட்சை வினாக்க *ளெல்லாம் மாணாக்கரது நுட்பமதியினைப் புலப்படுத்துவனவாம். மாணாக்கர்