பக்கம்:தமிழ் இனம்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ் இனம்

15

(ஜனப செட்டிமார்) எனப்பட்டனர். இவ்வாறு அலுவல் பற்றியும், இடம் பற்றியும், சிறப்புப் பற்றியும் வந்த பெயர்கள் எண்ணில. இவற்றை மேலும் அறிய விரும்புவோர் தமிழிலக்கிய அறி வோடு சேர நாட்டுச் சாதிப் பெயர்களையும் அங்கு வழக்கிலுள்ள பிற பெயர்களையும் உணர்ந்து ஆராய்தல் நலமாகும்.[1]

பிற்காலத் தமிழகத்தில்

இங்ஙனம் தொழில் பற்றியும், இடம் பற்றியும். சிறப்புப் பற்றியும், தோன்றிய பெயர்கள், நாளடைவில் எவ்வாறோ பிறவி பற்றியவை ஆகிவிட்டன. சாதிகளை ஒழித்துச் சமுதாயத்தை ஒரு நிலைக்குக் கொண்டுவர முயன்ற பௌத்த சமயமும், சமண சமயமும் நாட்டில் வீழ்ச்சியுற்றன. வடக்கே ஆட்சி யிலிருந்த “ஒரு குலத்துக்கொரு நீதி” கூறும் மனு தர்ம சாத்திரம் தென்னாட்டிலும் கால்கொண்டது. மனு நீதி முறைப்படி இந்நாட்டை ஆண்டதாகப் பெருமை பேசிக்கொண்ட மன்னர்கள் தென்னிந்திய வரலாற்றில் இடம் பெற்றுள்ளனர்.

நாயன்மார் காலத்திலும் ஆழ்வார்கள் காலத்திலும் சாதிவெறி தலை தூக்கியிருந்ததை நந்தனார் வரலாறும், யாழ்ப்பாணர் வரலாறும், திருப்பாணாழ் வார் வரலாறும் ஓரளவு தெரிவிக்கின்றன. சமணத்-


  1. Vide castes of Tribes of S. India, and Malabar Gazetteer.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_இனம்.pdf/12&oldid=1371603" இலிருந்து மீள்விக்கப்பட்டது