பக்கம்:தமிழ் இனம்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

14

தமிழ் இனம்

யாண்டவன் ‘ஊராளி’ எனப்பட்டான். சேனைத் தலைவனை தமிழன் ‘நாயன்’ எனவும், ‘நாயகன்’ எனவும், தெலுங்கன் ‘நாயடு’ என்றும், சேர நாட்டான் ‘நாயன்’ (நாயர்) என்றும் பெயர் பெற்றனர். பலவகை ஆடைகளுள் 'தேவாங்கு' என்னும் ஒருவகை ஆடையை நெய்தவர் ‘தேவாங்கர்’ எனப்பட்டனர். செக்காட்டி எண்ணெய் எடுப்பவன் ‘செக்ககன்’ எனப்பட்டான். கடலில் முக்கி (மூழ்கி)த் தொழில் செய்பவன் ‘முக்குவன்’ எனப்பட்டான் வேட்டையாடுபவன் ‘வேட்டுவன்’ எனப்பட்டான் ; கஞ்சம்-பித்தளை கஞ்சத்தால் வேலை செய்பவன் ‘கஞ்சான்’ எனப்பட்டான். இராசிகளைக் கணித்துச் சோதிடம் கூறியவன் ‘கணியன்’ எனப்பட்டான். வேல் ஏந்தி வெறியாடியவன் ‘வேலன்’ எனப் பெயர்பெற்றான்; பண் இசைத்துப் பாடினவன் ‘பாணன்’ எனப் பெயர் பெற்றான். செருப்புத் தைத்தவன் ‘செருமான்’ எனப்பட்டான். குறிஞ்சி நிலத்தில் வாழ்ந்வன் ‘குறிச்சியான்’ என்று அழைக்கப்பட்டான்.

ஒவ்வொரு தொழிலியற்றும் கூட்டத்தார்க்கும் ஒரு தலைவன் உண்டு; அவன் இடத்திற்கு ஏற்ப மூப்பன் என்றும், மூத்தன் என்றும், முதலி என்றும் பெயர் பெற்றான். வீரர்களின் போர்த்திறமைபைப்போர்த்திறமைபைப் பாராட்டி அரசர்கள் வீரர்களுக்கு ‘அரையன்’, ‘மாவரையன்’ என்னும் பட்டங்களை வழங்கியதும், அப்பட்டங்கள் நாளடைவில் ‘ராயன்’ என்றும், ‘ராயர்’ என்றும் ‘மாராய’ர் என்றும் வழங்கலாயின. ‘ஜனபா’ என்பது கோணிப்பை செய்வதற்குரிய ஒருவகைச் செடி. அச்செடிதரும் சணலைக்கொண்டு கோணி செய்பவர் ‘ஜனபர்’

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_இனம்.pdf/11&oldid=1378654" இலிருந்து மீள்விக்கப்பட்டது