பக்கம்:தமிழ் இனம்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

24

தமிழ் இனம்

பலியிட வேண்டா; இவள் கொண்ட மெலிவுக்குக் காரணம் இதுவாகும்,” எனத் தலைவனுக்கும் தலைவிக்கும் உள்ள தொடர்பைச் செவிலிக்குக் குறிப்பால் உணர்த்துவாள். இங்ஙனம் இவள் கூறும் முறை விசித்திரமானது. தலைவனிடம் செவிலி முதலியோர்க்கு அன்பு தோன்றுமாறு சில பொய் யுரைகளைக் கூறுவாள். “தலைவி புனல் விளையாடு கையில் நீர்ச்சுழியில் அகப்பட்டாள்; அந்நிலையில் ஒரு தலைமகன் தோன்றி அவளைக் காத்தான்.” என்றும், “தலைவி-மலர் பறிக்கையில் தனக்கு எட்டாத மலர் ஒன்றைப் பறிக்க விரும்பினாள். அவ்வமயம் ஒரு தலைமகன் தோன்றி அம்மலரைப் பறித்துத் தந்தான்” என்றும், “தலைவி எம்மோடு வந்த போது களிறு ஒன்று எதிர்ப்பட, அதைக்கண்ட தலைவி அச்சமுற்று அவனை அணைத்துக்கொண்டாள் ” என்றும் தலைவியின் களவொழுக்கத்தைச் செவிலிக்கு உணர்த்துவாள். இம்மூன்றும்முறையே, ‘புனல்தரு புணர்ச்சி’, ‘பூத்தரு புணர்ச்சி’, ‘களிறு தரு புணர்ச்சி’ எனப்படும்.

இதற்கு இடையில் தலைவன் தன் முயற்சியால், பொருள் ஈட்டிக்கொண்டு தலைவியின் தந்தையிடம் பெண்கேட்க வருவான். தலைவியின் பெற்றாேர் மணவினைக்கு உடன்படுவாராயின் இல்லத்திலேயே நடைபெறும். பெற்றாேர் மறுப்பின், தலைவன், தோழியின் உடன்பாட்டின்மீது தலைவியைத் தன் ஊர்க்குக் களவில் கொண்டு செல்வான். இஃது ‘உடன்போக்கு’ எனப்படும். தலைவனின் ஏற்றத்தையும், தலைவி அவன்பால் கொண்டுள்ள அளவற்ற காதலையும் உணர்வாராயின், பெற்றாேர் அவர்பின்சென்று, அவரைத் தம்ஊர்க்கு அழைத்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_இனம்.pdf/21&oldid=1371661" இலிருந்து மீள்விக்கப்பட்டது