பக்கம்:தமிழ் இனம்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருக்குறள்

31

தில் தவறு செய்தல் இயல்பு என்பது தெற்றென விளங்கும். முன்னோரது உண்மைக் கருத்து விளங்காதபொழுது பின்னோர் தம் கருத்தினை ஏற்றிக் கூறுதலும் வழக்கம் என்பதை நாம் மறந்து விடலாகாது. உரையாசிரியர் தாம் பின்பற்றும் சமயத்துக்கேற்பவும் முன்னோர் செய்யுளுக்குப் பொருள் காணுதல் இயல்பு. சிறந்த சமணராகிய மணக்குடவர் சமணத்துறை பற்றியே திருக்குறளுக்கு உரை கண்டவர். பரிமேலழகர் வைதிக நெறியினர் என்பது அவர் உரையால் நன்கறியப்படும். பரிதியார் பழுத்த சைவ சித்தாந்தி என்னும் உண்மையை அவரது உரை உணர்த்தும். காலிங்கர் சமண சமயச் சார்புடையவர் என்று கருத அவரது உரை இடந்தருகின்றது. இவை அனைத்தையும் உளங் கொண்டு, படிப்பவர் இப்பலவகைப்பட்ட உரைகளையும் மிக்க கவனத்துடன் படித்துத் திருக்குறளுக்கு ஏற்ற உரை எது என்பதைக் கண்டறிதல் வேண்டும்.

ஐந்தவித்தான்

“ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
இந்திரனே சாலுங் கரி”

என்னும் திருக்குறளுக்கு-ஐந்தவித்தான் ஆற்றலை அறிதற்குத் தேவேந்திரன் செயலே ஏற்ற சான்றாகும் என்பது கருத்து. “தான் ஐந்து அவியாது சாபம் எய்திநின்று, அவித்தவனது ஆற்றல் உணர்த்தினானாகலின் இந்திரனே சாலுங்கரி’ என்றார்,” என்பது பரிமேலழகர் விளக்கம். அஃதாவது, இந்திரன் ஐம்புலனடக்கம் இல்லாதவன் என்றும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_இனம்.pdf/28&oldid=1356736" இலிருந்து மீள்விக்கப்பட்டது