பக்கம்:தமிழ் இனம்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருக்குறள்

37

“ஆதியில் தோற்றத்து அறிவனை வணங்கிக்
கந்தன் பள்ளி கடவுளர்க் கெல்லாம் ”

- சிலப்பதிகாரம், நாடுகாண்காதை

இங்ஙனம் கடவுளர் என்ற சொல் சிந்தாமணி, சூளாமணி, கம்பராமாயணம் முதலிய நூல்களில் முனிவர் என்ற பொருளில் ஆளப்படுகின்றது.

தெய்வம் என்னும் சொல் வடமொழிச் சொல். தமிழில் கடவுளர் என்ற சொல் எப்பொருளில் (முனிவர் என்ற பொருளில்) வழங்கப்பட்டதோ அப்பொருளில் தெய்வம் என்ற வடசொல்லும் வழங்கப்பட்டதாகத் தெரிகிறது.

"முலைமறைக்கப் பட்டுநீ ராடாப் பெண்கள்
முறைமுறையால் ‘நந்தெய்வம்’ என்று தீண்டி"

என்னும் திருநாவுக்கரசர் திருத்தாண்டகத்தில் வந்துள்ள நந்தெய்வம்’ என்னும் தொடர், ‘நம்முனிவர்’ என்னும் பொருளைத் தருகின்றமை காண்க. முதல்வரியில் குறிக்கப்பட்ட பெண்கள் சமண சமயத்துப் பெண் துறவிகள். அவர்களால் வணங்கப்பட்ட சமண முனிவர் என்பது பொருள். அதே பொருளைத்தான் மேற்சொன்ன திருக்குறளில் வந்துள்ள தெய்வம் என்னும் சொல்லும் குறிப்பதாகக் காலிங்கர் பொருள் கொண்டனர். உலகப்பற்றை அறவே வெறுத்த முற்றத்துறந்த முனிவர்க்கு வேண்டுங்கால் உணவு கொடுத்தற்கு இல்லறத்தாரைத் தவிர இவ்வுலகில் வேறு யாருளர் ? இல்லறத்தார் தம்மைக் காத்துக்கொள்வதோடு துறவறத்தாரையும் காக்கக் கடமைப்பட்டவராவர் என்பது நாம் அனைவரும் அறிந்துள்ள உண்மைதானே! இப்பொருளே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_இனம்.pdf/34&oldid=1507205" இலிருந்து மீள்விக்கப்பட்டது