பக்கம்:தமிழ் இனம்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

48

தமிழ் இனம்

புனக் காவல், தயிர் கடைதல், விற்றல், மீனுப்புப் படுத்தல், உப்பெடுத்தல் முதலிய அருந் தொழி லில் ஈடுபடுவர். எனவே, இந்நிலங்களில் உள் ளோர் ஆண்டு முழுவதும் உழைத்து உண்ண வேண்டுபவராகின்றனர். ஆகவே, இங்குள்ள ஆடவர் அறநெறி தவறி நடக்கச் சிறிதும் வழி யில்லை. ஆனல் மருத நிலத்தார் வாழ்க்கை இங் ங்னமன்று. வயல்வேலை ஆறு மாதமே ; ஏனைய மாதங்களில் வேலையற்றுத் திரியவேண்டும் நிலையில் அமைகின்றனர். எனவே, அவர்கள் உல்லாச வாழ்க்கையை விரும்புதல் இயல்பே. அவர்தம் உல்லாச வாழ்க்கைக்கு உற்ற துணைவியராகப் பரத்தையர் உறுதலும் இயல்பே. இப்பரத்தை யர் (பாணர்-பாணிச்சியர் அல்லர்) ஆடல் பாடல் களில் வல்லுநராயிருத்தல் பின்னும் பாராட்டற் பாலது. எனவே, காமநிறை இழந்த ஆடவர் இப் பரத்தியரிடை வதிவதும், பின் இல்லம் போதலும் இயல்பு. இக்கூடா ஒழுக்கத்தைத் தலைவி அறிவா ளாயின், அவள் தலைவனிடம் சிறு கோபம் கொள் வள். இதனை ஊடல் ‘ என்றனர் முன்னையோர். இவ்வூடலைத் தலைவன் தக்க சமாதானங் கூறித் தணிவித்துத் தலைவியை மகிழச்செய்து அவளொடு கூடும் கூட்டம் கூடல் ‘ எனப்படும். இதுவே இம் மருத நிலப் பண்பு. ஊடல் நிகழ்ந்த பின்னர்க் கூடல் நிகழுமாயின், அஃது எத்துணைப் பேரின் பம் பயப்பதென்பது பழைய பாக்களாலும் இல்லத்து நடைமுறையாலும் இனிதுணரலாம்.

பரத்தையர்க்கும் தலைவிக்கும், இக்காலத்தும் அவ்வப்போது மனவருத்த வாதங்கள் நிகழ்தல் யாண்டும் காணப்படல் போலவே, பண்டை மருத

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_இனம்.pdf/45&oldid=1507215" இலிருந்து மீள்விக்கப்பட்டது