பக்கம்:தமிழ் இனம்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஐந்தினை அமுதம்

49

நிலத்துப் பயின்றிருத்தல் நூல்கள் வாயிலாக அறியக் கிடக்கின்றது. ஒரு பரத்தை, பாங்கா யிஞர் கேட்பப் பின்வருமாறு கூறுகின்றாள் : “புது வெள்ளம் வந்த பெரிய நீர்த்துறையை விரும்பிய யாம் எமது கூந்தலில் ஆம்பலின் புறவிதழ் ஒடித்த முழுப்பூவைச் செருகி அப்புனல் விளையாட்டைச் செய்யச் செல்வோம் ; தலைமகள் அதனை அஞ்சினளாயின்,வெய்யபோரில் துரசிப்படை அழியும்படி எதிர்த்து நின்ற பல வேல்களையுடைய 'எழினி' பகைத்துக் கவர்ந்துகொண்ட பசுக்கூட்டத்தை, உரியவர் ஒன்று கூடித் தடுப்பதுபோலத் தோழியர் குழாத்துடன் தன் கொழுநனது மார்பை எமது கைக்கு அகப்படாதபடி காக்கட்டும்.”

"கூந்தல் ஆம்பல் முழுநெறி அடைச்சிப்
பெரும்புனல் வந்த இருந்துறை விரும்பி
யாமஃ தயர்கஞ் சேறும்; தானஃ(து)
அஞ்சுவ துடைய ளாயின், வெம்போர்
நுகம்படக் கடக்கும் பல்வேல் எழினி
முனையான் பெருநிரை போலக்
கிளையொடு காக்கதன் கொழுநன் மார்பே."

- குறுந்தொகை, 80

இதனை நோக்கப் பரத்தையின் மனப்பான்மையும், அவள் தலைவனிடம் பெற்றிருந்த செல்வாக்கும் நன்கு விளங்கும். பரத்தையர் வெளியே வருகையில் தலைவி அவர்களைத் தலைவன் காணுதவாறு செய்யும் வழக்கம் உண்டென்பது பின்வரும் பாவால் புலனாகும். "இப்பரத்தை பரந்த கண்களையுடையவளாய் நறுநாற்றம் அளாவிய கூந்தலை உடையவளாய், ஒன்றை ஒன்று தாக்குறும் தொடைகளைப் பெற்றவளாய், தழைகளை ஆடையாக அணிந்தவளாய்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_இனம்.pdf/46&oldid=1507218" இலிருந்து மீள்விக்கப்பட்டது