பக்கம்:தமிழ் இனம்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஐந்தினை அமுதம்

51

“என்னலம் தொலைவ தாயினும் துன்னலம் பெருமபிறர்த் தோய்ந்த மார்பே.” — ஐங்குறு நூறு, 63

எனத் தனது வெறுப்பைக் காட்ட, தலைவன் தான் அக்கூடா ஒழுக்கம் செய்திலன் என்று செப்புவன். அதற்குத் தலைவி நகைத்து,

“மறைத்தல் ஒல்லுமோ மகிழ்ந !
புதைத்தல் ஒல்லுமோ ஞாயிற்ற தொளியே ?”

“சிறுவரின் இனைய செய்தி
நகாரோ பெரும,நிற் கண்டிசி னேரே ?””

எனப் பரத்தையர் கூட்டம் உண்மையை வலியுறுத்திப் பேசிக் கோபப்படுதல் ஊடலாகும். பின்னர்த் தலைவன் பலவாறு சமாதானம் கூறித் தலைவியைக் கூடுவன். பரத்தையர் கூட்டுறவு தலைவனுக்கிருந்த தேனும், அதனைத் தலைவியும் தோழியும் முற்றும் கேவலப்படுத்தினாரல்லர் என்பதும்,தலைவன் தலைவி யினிடம் என்றும் நீங்கா அன்புடையணாயிருந்தான் என்பதும், தலைவன் இங்ஙனம் பரத்தையர் இல்லம் சேரல் மருதத்து மட்டுமே என்பதும் பண்டை நூற் பயிற்சியுடையோர் நன்கறிந்த செய்திகளாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_இனம்.pdf/48&oldid=1507230" இலிருந்து மீள்விக்கப்பட்டது