பக்கம்:தமிழ் இனம்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

5. கண்ணகி


கண்ணகியின் மணம்

பண்டைத் தமிழர் மணம் களவு-கற்பு என்னும் இரு பிரிவுகளைப் பெற்றது. தொல்காப்பியர்க்கு முன்னர்த் தோனறிய ஆசிரியர்க்கு முன்னர் இத் தமிழரிடை இருந்த மணம் களவு மணம் ஒன்றே யாம். அக்களவில் சில குறைபாடுகள் நேர்ந்த காரணமாகத் தமிழ்ப் பெரியோர் (ஐயர், ஒழுக்கங் களால் வியக்கத்தக்கவர்) சில சடங்குகளை (கரணங்களை) ஏற்படுத்தினர். இதனைத் தொல்காப்பியர் கற்பியலில்,

"பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்
ஐயர் யாத்தனர் கரணம் என்ப"

என்றார். எனவே, தொல்காப்பியர்க்கு முன்னரே 'களவு-கற்பு' என்னும் இரு மணமும் ஒரு மண மாய்த் தமிழகத்தே திகழ்ந்தன என்பதறிதல் அவ சியமாகும். இக்களவு மணம் தமிழகத்தே பெரு வழக்குடையதாக இருந்ததென்பதும், களவு நடந்த பிறகே கற்பு மணம் பெரும்பான்மை நிகழும் என்ப தும் பண்டை நூல்களைப் பழுதறப் படித்தவர் உண ரக்கூடும். இக்களவு மணம் கடைச்சங்க காலத்தோடு-ஏன் ? சிலப்பதிகார காலத்தோடு இறந்து விட்டதென்னல் மிகையாகாது. அதன் பின்னர் எழுந்த கோவை நூல்கள் ஏட்டளவில் களவு மணத்தை இயம்பப் புறப்பட்டனவே அன்றி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_இனம்.pdf/49&oldid=1507222" இலிருந்து மீள்விக்கப்பட்டது