பக்கம்:தமிழ் இனம்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

1. தமிழ் இனம்

இனவாழ்வின் உயிர்நாடி

ஒரு மொழி பேசும் மக்கள் தொகுதியை ‘இனம்’ என்னும் சொல்லால் குறிக்கலாம். இதன் படி, ‘தமிழ்’ என்னும் மொழியைப் பேசும் மக்களைத் ‘தமிழ் இனம்’ என்னும் தொடரால் குறிப்பது பொருந்தும். இவ்வொரு மொழி பேசும் மக்கள் இனம் வன்மை பெற்றதாக விளங்க வேண்டுமாயின், அவ்வினத்தைச் சேர்ந்த மக்கள் இயற்கையாய் அமைந்த இன வாழ்வு உடையவராக இருத்தல் வேண்டும். அஃதாவது, அவ்வினத்தைச் சேர்ந்த அனைவரும் ஒரு தாய் ஈன்ற மக்களைப்போல வாழ வசதியிருத்தல் வேண்டும். உழைப்பால் எவரும் இனவாழ்வில் எத்தகைய உயர் நிலையையும் அடையத்தகும் வசதி அவ்வினத்தில் அமைந்திருத்தல் வேண்டும். இதனை மேலும் விளக்கிக்கூற வேண்டுமாயின், ஒரே மொழி பேசும் மக்கள் சேர்ந்து வாழும் இன வாழ்வில் பிறவி கொண்டு பிரிக்கப்படும் பாகுபாடுகள் இருத்தல் கூடாது. அவரவர்தம் முயற்சியால் உயர்ச்சி பெறலாம் என்னும் இனவாழ்விற்கு உயிர்நாடியான அடிப்படை இனவாழ்வில் அமைந்திருத்தல் வேண்டும்.

மேனாடுகளில் இனவாழ்வு

இவ்வின வாழ்வின் உயிர்நாடி நன்கு அமையப்பெற்ற காரணத்தால்தான் மேல்நாடுகள் அறிவிலும் ஆற்றலிலும் நம்மால் எண்ணிப் பார்க்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_இனம்.pdf/6&oldid=1378647" இலிருந்து மீள்விக்கப்பட்டது