பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27

27

மலர்ந்த மொழித் திருமூலத் தேவர் என்றும், உள் உணர்வை ஞானம் முதலிய ஒரு நான்குண்மை தெள்ளு தீந்தமிழால் கூறும் திருமூலர்' என்றும் கூறித் திருமூலர் சிறப்பினைப் போற்றியுள்ளனர். சேக்கிழார் திருவாய் மூலம், திருமூலர் நந்தி அருள் பெற்றவர். நான்கு வேதங்களை உணர்ந்த யோகிகள், எண்வகைச் சித்திகள் கைவரப் பெற்றவர், தவ முனிவர், அருள் உள்ளம் படைத்தவர், சைவநெறியின் உண்மையினை உணர்ந்தவர், மேல்மேல் ஒங்கும் தவச் சிரேட்டர், நல்லெண்ணமும் மதிப்பும் நிறைந்த உணர்ச்சி யுடையவர், ஆர்வம் கோபம் முதலானவற்றை ஒழித்தலர், சரியை, கிரியை, யோகம், ஞானம் ஆகியவற்றைத் தம் திகு மந்திரம் மூலம் மொழிந்தவர், அந் நால் நெறிகளைத் தெளிந்த தமிழ் மொழியால் மொழிந்தவர் என்பன போன்ற கருத் துக்கள் வெளியாகின்றன.